புத்திரசுவிகாரம் - பாகம் - 3 Jeffersonville, Indiana, USA 60-0522M 1சகோ. நெவிலுக்கும் வகுப்புக்கும் காலை வணக்கம். மீண்டும் இவ்விடம் வந்து, எல்லாவற்றிற்கும் போதுமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல் கூறுவதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருடைய துதிகளும் ஆசீர்வாதங்களும் கொண்ட ஒரு மகத்தான வாரமாக இது உங்களுக்கிருந்தது என்று நம்புகிறோம். இன்று காலை நான் இங்கு வந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் எனக்கு, இரு சிறு குழந்தைகளைப் பாதுகாக்கும் தேவதூதனின் சின்னம் (plaque) ஒன்றை தந்தான். அவன் டால்டன் குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. 2சில வாரங்களுக்கு முன்பு... ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு - கிறிஸ்தவ தகப்பனார் ஒருவர் கிறிஸ்தவள் அல்லாத தன் வாலிப மகள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் ஜெப வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவரிடம், ''உன் விருப்பப்படியே உன் மகளை உனக்குத் தருகிறேன்'' என்றார். இன்று காலை அவள், பரிசுத்த ஆவியானவர் உரைத்தபடியே, இரட்சிக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, மேடையில் அமர்ந்து கொண்டிருக்கிறாள். மற்ற பிள்ளைகளும் சுற்றி அமர்ந்துள்ளனர். இதன் காரணமாக டால்டன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று நான் அறிவேன். 3அந்த குழந்தையை வைத்திருக்கும் அந்த பெண்ணைப் பார்த்தீர்களா? சென்ற ஞாயிறன்று அந்த குழந்தைக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அது மரித்துவிடும் என்று கருதினர். இன்று காலை அது உயிருடன் இருப்பதை நான் காண்கிறேன். சகோதரியே, நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடையவர்களாயிருக்கிறோம். அதற்கு தசை பலம் குன்றிவிட்டதாக (muscular dystrophy) எண்ணியிருந்தனர். ஆனால் அது இல்லை. அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 4என் நல் நண்பர்கள் அனைவரையும் நான் காண்கிறேன். இந்த மனிதன் ஒரு முறை சட்டக்வா என்னுமிடத்தில் என்னிடம் விசேஷ பேட்டி ஒன்றிற்கு வந்தது என் நினைவுக்கு வருகிறது. நான் உங்களுடனும், மனைவியுடனும், பிள்ளைகளுடனும் காலை உணவு அருந்தினேன் - மிடில்டவுன் என்னுமிடத்தில், அப்பெயர் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை. ஆகவே தான் சட்டக்வா என்று கூறினேன். ஆம், ஐயா. என் நல் நண்பர்களில் அநேகர் வந்துள்ளனர். இங்குள்ள சார்லி காக்ஸாம் சகோதரி நெல்லியும். அது என் இரண்டாம் குடும்பத்தைப் போன்றது. அவர்களை என் சொந்த பிள்ளைகளைப் போலவே கருதுகின்றேன். நான் அதிக நேரம் இளைப்பாற வேண்டுமானால், அங்குதான் செல்வது வழக்கம். நான் இந்தியானாவில் இருந்த போது, சார்லி தான் கென்டக்கியிலேயே மிகவும் சிறந்த அணில் வேட்டைக்காரர். ஆகவே இந்தியானா... சார்லி, இதை உம்மிடம் கூற விரும்புகிறேன். நான் போகும் முன், ஒரு சில அணில்களை பிடிக்க வேண்டுமெனும் ஆவல் தோன்றுகிறது. அந்த சிரமத்தையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ளமுடியும் என்னும் உணர்வு தோன்றுகிறது. 5சகோ. பார்னல்... தென் கரோலினாவைச் சேர்ந்த ஆர்னெட். பின்பு சகோதரன்... அநேக நண்பர்கள் பலயிடங்களிலிருந்து இன்று காலை எங்களை சந்திக்க வந்துள்ளனர். நாம் இங்கு அங்கத்தினர்களைச் சேர்ப்பது கிடையாது என்று உங்களுக்குத் தெரியும். நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளுகின்றோம். அப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை எல்லா அநீதியினின்றும் சுத்திகரிக்கின்றது. 6நாம் ஒரு அற்புதமான பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம், மிகவும் மேன்மையானது. நாம் அனைவரும் என்னைப் பொறுத்தவரையில் நான் இதை மிகவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு நாளில் நான் பேசவோ அல்லது படிக்கவோ தொடங்குகிறேன். இரண்டு வசனங்களை நான் படிப்பேன். அதன் பின்பு வேத வாக்கியங்களை ஆராயத் தலைப்படுவேன். இப்படியாக ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வசனங்களை ஆராய்ந்து, அப்படி சென்று கொண்டேயிருப்பேன். எபிரெயர் நிருபத்தைப் பற்றி பேச சிறிது சமயம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆவல் கொள்கிறேன். அணிலின் காலம் தொடங்கும் போது - அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதை ஆரம்பித்து, அயல் நாடுகள் போக வேண்டிய சமயம் வரைக்கும் ஒவ்வொரு இரவும் எபிரெயர் நிருபத்தை அல்லது யாத்திராகம் புத்தகத்தை நாம் ஆராயலாம் - எப்படி தேவன் தமது ஜனங்களை வெளியே கொணர்ந்து யாத்திரையைத் தொடங்கினார் என்று. நாம் இப்பொழுது யாத்திரைக்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கு அது ஒரு அழகான முன்னடையாளம். ஓ, அது மிகவும் அழகானது. வேதவாக்கியங்கள் அனைத்துமே ஒன்றாக இணைகின்றன. அது ஒரு பெரிய சரித்திரம். 7இன்று காலை நாம் - நாம் இன்னும் எபேசியர் நிருபத்தில் நிலைத்திருக்கிறோம். நாம் எபேசியர் நிருபத்தின் முதல் மூன்று அதிகாரங்களை எடுத்துக் கொண்டு, பவுல் எபேசு பட்டினத்திலிருந்த எபேசியருக்கு எழுதின நிருபத்திலிருந்து, சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்த முயன்று கொண்டிருக்கிறோம். அதை அணுகும் முன்னர், ஒரு சில நிமிடங்கள் நாம் ஜெபத்திற்காக செலவிடலாமா? 8எங்கள் ஆண்டவரே. எங்கள் தேவனே, தகுதியற்றவர்களாய் இப்பொழுது நாங்கள் உமது சமுகத்தில் வந்திருக்கிறோம். ஆயினும் எங்களுக்காக இரத்த பலி ஒன்று காத்திருக்கிறது என்றும், அது எல்லா அசுசியும் நீங்க எங்களை சுத்திகரித்து, எங்களை குற்றமற்றவர்களாக பிதாவின் முன்னிலையில் நிறுத்தும் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். இதற்குத் தகுதியாயிருக்க எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இயேசு எங்களுக்காக இதை செய்து முடித்ததினால் நாங்கள் தாழ்மையுடன் அவருடைய சமுகத்தையும், அவருடைய நாமத்தையும் வணங்கி, எங்கள் மத்தியில் பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். நான் ஒரு வேதபண்டிதன் அல்ல. வேதவாக்கியங்களை எவ்வாறு ஒழுங்காக அமைக்க வேண்டுமென்று எனக்குத் தெரியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் அசைவதால், நான் உணர்ச்சியடைந்தவனாய், உற்சாகமுள்ளவனாய் இருக்கிறேன். எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையை நாங்கள் வாசிக்கும்போது, எங்கள் அனைவரையும் அது ஒருங்கே ஆசீர்வதித்து, எங்களுக்கு அது நித்திய ஜீவனாய் அமைவதாக. பிதாவே, இதை அருளும். இதை இயேசுவின் நாமத்தில், இயேசுவின் நிமித்தம் கேட்கிறோம். ஆமென். 9இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் ஒப்புக் கொள்ளாத ஒன்றை நான் எப்பொழுதாகிலும் கூறநேரிட்டால் - அதாவது, உங்கள் போதகங்களுக்கு மாறாக காணக் கூடிய, உங்களால் இணங்க முடியாத ஒன்றை - பரிசுத்த ஆவியானவர்தாமே அதை உங்களுக்குப் பதனிட்டு இனிமையாக்கித் தந்து, அதன் விளைவாக உங்களில் எவ்வித விரோத மனப்பான்மையும் எழாதபடி பாதுகாக்க, அவரையே நான் நம்பியிருக்கிறேன். பாருங்கள்? அது அன்பினாலும் ஐக்கியத்தினாலும் செயல்படும் ஒன்றாகும். அப்படித்தான் அது இருக்க வேண்டும். இது அனைத்தும் சென்ற ஞாயிறன்று காலை நான் அளித்த 'புறக்கணிக்கப்பட்ட ராஜா' என்னும் செய்தியுடன் தொடங்கியது. உங்கள் யாரிடமாவது அந்த ஒலிநாடா உள்ளதா? அவர்கள் அந்த ஒலி நாடாக்களை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், வேண்டுமானால் 'புறக்ணிக்கப்பட்ட ராஜா' என்னும் செய்தியின் ஒலிநாடாவை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 10இன்னும் சில நாட்கள் கழித்து நாங்கள் ஒஹையோவிலுள்ள மிடில் டவுனில் நடை பெறவிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறோம். விடுமுறை உள்ளவர் அனைவரும் அச்சமயம் எங்களை அங்கு சந்திக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனெனில் அங்கு நாங்கள் மகத்தான ஐக்கிய நேரம் ஒன்றை எதிர்பார்க்கிறோம். டாக்டர் சலிவன் தான் அக்குழுவின் தலைவர். அங்கு ஐந்து இரவுகள் கூட்டங்கள் நடைபெறும். நான் அந்த அனைத்து ஸ்தாபனங்கள் சபையின் சர்வதேச கன்வென்ஷனில் விருந்து பேச்சாளராக (guest Speaker) பேசுவேன். அதன் பின்பு நமது சொந்த கூட்டங்கள் பன்னிரண்டாம் தேதி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மேலும் ஒரு வாரம் கூட்டங்கள் நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டுமென்று அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் எப்படி வழி நடத்துகின்றாரோ அதை பொறுத்தது. நாம் எல்லோரும் ஆவியானவரால் வழிநடத்தப்பட விரும்புகிறோம். பரிசுத்த ஆவியானவர் எதை செய்யக் கூறுகின்றாரோ, அதை உடனே செய்யுங்கள். 11நாம் பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படியும் போது, ஒரு பெரிய பாடத்தை படிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அதாவது, எதையும் நாம் அவசரப்பட்டு செய்யக் கூடாது. நாம் மெல்லச் செய்து, விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் தேவனிடத்தில் எதையாகிலும் கேட்டால் அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர் என்பதை ஞாபகம் கொள்ளவேண்டும். அவர் தமக்குரிய நேரத்தில் மாத்திரமே, அதை நமக்கு நேர்த்தியாகச் செய்து, நமக்கு நன்மையாக வாய்க்கும்படி செய்வார். அப்படி இல்லையென்றால், இன்று காலை நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதாக ஏன் கூறிக் கொள்ளவேண்டும்? தேவனுடைய வார்த்தை உண்மையாயிராமல் போனால், எல்லா மனிதர்களைப் பார்க்கிலும் நாம் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம். இது தேவனுடைய பிழையற்ற வார்த்தை என்று அறிந்திருப்பவர்களின் இருதயங்களுடன் என்னுடைய இருதயமும் இணைந்திருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன். இதில் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு கட்டமும் சத்தியமாகும். தேவனுடைய கிருபையினால் அந்த தேசத்தைக் காணும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்றாவது ஒரு நாளில் நாமும் பயணப்பட்டு அங்கு செல்வோம். 12நேற்று இத்தகைய ஊழியத்தில் எப்படிப்பட்ட சோர்வுள்ள தருணம் வரும் என்று ஜனங்கள் அறிவதில்லை. எனக்கு உண்மையாகவே சோர்வு ஏற்பட்டது. என் மனைவியிடம் நான், இவ்வூழியத்தில் என்னால் தொடர்ந்து செல்லக் கூடுமானால் நலமாயிருக்கும்'' என்றேன். அவள், ''பில், ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்“ என்றாள். நான், ''ஓ, எனக்கு அதிக சிரமங்கள் ஏற்படுகின்றன'' என்றேன். “அவைகளையெல்லாம் விட்டுவிட்டு வேறு வழியில் செல்லப் பார்கின்றாயா? அவைகளிலிருந்து ஏமாற்றி செல்ல முயற்சிக்கின்றாயா?'' என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறுவது போல் தோன்றினது. பாருங்கள்? “இல்லை, நான் சிரமங்களை முகமுகமாய் சந்திப்பேன் என்றேன்” பாருங்கள்? அங்கு மிகவும் நன்றாக இருக்கும். நான் உத்தமமாக உண்மையாக, என் கண் கண்டவைகளை சாட்சியாக அறிவிக்கிறேன். இவ்வாழ்க்கை முடிவுற்ற பின்பு, நாம் நினைப்பதைக் காட்டிலும் மிக்க மேன்மையுள்ள ஒரு தேசத்தில் பிரவேசிப்போம். இங்கு அந்நியர்கள் யாராகிலும் இருப்பார்களானால், நான் மூடபக்தி வைராக்கியம் கொண்டவன் என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாமென்று தேவனை நோக்கி ஜெபிக்கிறேன். உத்தமமாக உங்களிடம் உண்மையையே கூற விரும்புகிறேன். இங்கு இவ்வளவு சத்தியம் உள்ள பொழுது தவறான ஒன்றை உங்களிடம் கூறுவதனால் என்ன பயன்? நான் ஏன் தவறானவைகளைக் கூற வேண்டும்? பாருங்கள்? இது சத்தியம். 13பவுல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டு பேசப்படாத வார்த்தைகளை அவன் கேட்டதில் வியப்பொன்றுமில்லை. ஒரு நாள் அவன், “தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை'' என்றான். ஓ, அது ஜீவனுள்ளதாயிருக்கிறது! இங்கு நாம் அழுக்குக் குவியலில் வாழ்ந்து வருகிறோம். அவ்வளவுதான்... புகைந்து கொண்டிருக்கும் அழுக்குக் குவியல். அதனால் நாம் அழுக்காகாமல் போனாலும், அதிலே தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அது பாவம் என்பதை அங்கு எரிப்பதனால், புகைந்து வருகின்றது. பட்டினத்திலுள்ள அழுக்கு குவியல் எரிந்து புகைவதைப் போன்ற குமட்டலான காரியம் வேறெதுவும் இருக்க முடியாது. நீங்கள் எப்பொழுதாகிலும் அதனருகில் சென்றதுண்டா? அந்த அழுக்கிலிருந்து, எல்லாவித துர்நாற்றம் கலந்த புகை தோன்றி வெளிவரும். நீங்கள் அதை முகர்ந்தால், அது உங்களை மயக்கத்தில் ஆழ்த்தும். 14நான் நியூ ஆல் பனியில் பதினெட்டாம் தெருவுக்குச் சென்று, மீட்டரை பார்த்து பணம் வசூல் செய்யும் சமயம் என் ஞாபகத்திற்கு வருகின்றது. அங்கு ஒரு அழுக்கு குவியல் இருப்பது வழக்கம். அவ்வழியில் போகவேண்டிய நாள் வந்தாலே எனக்கு வெறுப்பு தோன்றும். ஏனெனில் அங்கு பயங்கரமான துர்நாற்றம். அங்கு எலிகளின் உடல்களும், நாய்களின் உடல்களும் எரிந்து புகைந்து, பயங்கரமான துர்நாற்றம் தோன்றும். இந்த வாழ்க்கையை அதனுடன் ஒப்பிடலாம். ஆவிக்குரிய விதமாக கூறினால், பாவமானது எரிந்து புகைந்து, எல்லாவிடங்களிலும் துர்நாற்றம் வீசுகின்றது. ஆனால் நதிக்கு அப்பால், காற்று சுயாதீனமாக வீசி, எங்கு பார்த்தாலும் அழகாகவும், அன்பு, சந்தோஷம், நித்திய ஜீவனாகவும் காணப்படுகின்றது. ஆனால் நாம் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே, நமது போராயுதங்களைக் கீழே வைத்து விட்டு, ''நாம் துரிதமாக அங்கு சென்றுவிடலாம்'' என்று சொல்ல வேண்டாம். நாம் யாரையெல்லாம் நம்முடன் கொண்டு வர முடியுமோ, அவர்களையெல்லாம் கொண்டு வருவோம். ஆம், 15இந்த பாடங்களின் நோக்கம், தேசத்தில் பிரவேசித்தவர்களை நங்கூரப்படுத்தலேயாம். இந்த பாடத்தின் நோக்கம் - எபேசியர் நிருபம் - சபை கிறிஸ்துவில் முற்றிலுமாக நிற்கும் அளவிற்கு, அதை அதன் ஸ்தானத்தில் பொருத்துவதே. அது பழைய ஏற்பாட்டிற்கும் யோசுவாவின் புத்தகத்திற்கும் முன்னடையாளமாகத் திகழ்கின்றது. யோசுவாவின் புத்தகத்தில், யோசுவா தேசத்தை இஸ்ரவேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். யோசுவா எவ்வாறு ஒவ்வொரு கோத்திரத்துக்கும் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான் என்று சென்ற ஞாயிறன்று பார்த்தோம். அவன் கர்த்தருடைய ஆவியினால் அப்படி செய்தான். மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்தும், அங்கிருந்த வெள்ளைப் பூண்டுகளிலிருந்தும், கொம்மட்டிக் காய்களிலிருந்தும் வெளியே கொண்டு வந்து, நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு அவர்களை வழிநடத்தி சென்றான். மோசே இஸ்ரவேல் புத்திரரை அந்த தேசம் வரைக்கும் கொண்டு வந்தானேயன்றி, அதற்குள் கொண்டு செல்லவில்லை. இயேசு ஆவிக்குரியவர்களுக்கு... தொடக்கத்திலிருந்து நமக்கு பரிசுத்த ஆவி வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது. இயேசு நம்மை அந்த வாக்குத்தத்தம் வரைக்கும் வழிநடத்திச் சென்றார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் யோசுவாவாக வந்து, சபையை தேசத்திற்குள் வழிநடத்தி, அதை சுதந்தரித்துக் கொள்ளும்படி செய்தார். அடிப்படையில் நாம் காண்கிறோம்... 16இங்கு தான் நான் கடூரமாகப் பேசுகிறேன் என்றும், சகோதரர்களை அவமரியாதை செய்கிறேன் என்றும் ஜனங்கள் நினைக்கலாம். அப்படியல்ல! தேவனே எனது நியாயாதிபதி. நான் அப்படிச் செய்யவில்லை. பாருங்கள்? சத்தியத்தை மாத்திரமே நான் சுட்டிக்காட்ட முயல்கிறேன். பாருங்கள்? பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்குப் பதிலாக நாம் மனிதர்களின் வழிநடத்துதலை தெரிந்து கொண்டிருக்கிறோம். நமது பாகத்தை நமக்கு வகுத்து கொடுத்து நம்மை வழிநடத்த, நாம் மனிதனை விரும்பினோம். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், கிறிஸ்து சபை, பெந்தேகோஸ்தே போன்ற ஸ்தாபனங்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்க நாம் விரும்பினோம். அதை நாம் பின் பற்றுகிறோம். ஆனால் நாமோ... நாம் அப்படி செய்ய வேண்டுமென்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை. அதை ஆதரிக்கும் ஒரு வேதவாக்கியம் கூட வேதாகமத்தில் கிடையாது - அதாவது அவர் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தினார், அல்லது ஸ்தாபனத்தை ஆதரித்து பேசினார் என்பதற்கு ஆதாரமாக வேதத்தில் ஒரு இடமும் கூட கிடையாது. ஆனால் அதற்கு எதிராகப் பேசும் அநேக வேத வாக்கியங்கள் - காணப்படுகின்றன. இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷத்தை நாம் தரிக்கக் கூடாது என்று தான் அவர் கூறுகிறார். நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்களாய், அவருக்கு சொந்தமானவர்களாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். நான் புத்திக்கெட்ட விதமாக (Silly) இருக்கவேண்டும் என்பதற்காக இதை கூறவில்லை. நாம் வெளியே அழைக்கப்பட்ட ஜனங்களாக, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஜாதியாக, எல்லா நிந்தைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்தினவர்களாய், அவர் நமக்குள் கிரியை செய்து, அவர் எப்படி நடந்து கொள்வாரோ, அவ்வாறே நாமும் நடந்து கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் தான் கூறுகிறேன். ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். 17புதன் இரவு உங்களில் அநேகர் இங்கில்லை. நாங்கள் 3-ம் வசனம், இல்லை, நம் வசனத்தைப் பார்த்தோம் (எபேசியர் முதலாம் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார். தமிழ் வேதாகமத்தில் அது ஆறாம் வசனம் - தமிழாக்கியோன்.) ...சுவிகார புத்திரராகும்படிக்கு..., அல்லது ஜனங்களை அவர்களுடைய ஸ்தானத்தில் வைத்தல். தேவன் எவ்விதமாக தமது ஜனங்களை அவரவர் ஸ்தானத்தில் வைக்க முனைகிறார் என்று ஒரு நபரை தேவன் அவனுடைய ஸ்தானத்தில் வைக்கும் போது, எல்லோரும் அந்த மனிதன் வகிக்கும் ஸ்தானத்தையே வகித்து, அவன் புரியும் செயல்களையே புரிய விரும்புகின்றனர். ஆனால் நாம், வெவ்வேறு விதமாக இருக்க உண்டாக்கப்பட்டிருக்கிறோம், நாம் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டிருக்கிறாம், நாம் வெவ்வேறு ஸ்தானங்களில் வைக்கப்பட்டு, வெவ்வேறு செயல்களைப் புரிய வேண்டியவர்களாயிருக்கிறோம், ஒருக்கால் ஒருவருக்கு சிறிய வேலை நியமிக்கப்பட்டிருக்கலாம், மற்றொருவருக்கு பெரிய வேலை நியமிக்கப்பட்டிருக்கலாம். தாவீது, அல்லது வேறு ஏதோ ஒரு தீர்க்கதரிசி, இவ்விதம் கூறினான் என்று நினைக்கிறேன். எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. ''ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும், என் தேவனுடைய வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்வேன்“. 18இப்பொழுது நாம் புத்திரசுவிகாரத்தைக் குறித்து பேசுவதை சற்று நிறுத்தி விட்டு, நம்மால் இயன்றவரை, தொடர்ந்து நம் வசனத்திற்கு கீழுள்ள வசனங்களைப் படிப்போம். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொருளை (theme) ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அது முற்றிலும் ஸ்தானத்தில் வைக்கப்படுதலைக் குறித்ததே. எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? நீங்கள் ஒருமித்து கூறுவதை நான் கேட்கட்டும். (சகோ. பிரான்ஹாம் கூற கூற, சபையோர் அதை திரும்பவும் கூறுகின்றனர் - தமிழாக்கியோன்). இயேசு கிறிஸ்துவின் (“இயேசு கிறிஸ்துவின்”) சரீரத்தை (''சரீரத்தை“) கிறிஸ்துவுக்குள் (”கிறிஸ்துவுக்குள்“) அதன் ஸ்தானத்தில் (”அதன் ஸ்தானத்தில்“) வைத்தல் (”வைத்தல்“) அங்கு பரிசுத்த ஆவியானவர் (”அங்கு பரிசுத்த ஆவியானவர்“) நம்மை வழி நடத்துகின்றார் (”நம்மை வழி நடத்துகின்றார்“). அது தான். நாம் இப்பொழுது புரிந்து கொண்டோம். பாருங்கள். நம்மை ஸ்தானத்தில் வைத்தல். எபேசியர் நிருபம் அதை செய்ய வேண்டும். 19இந்த சிறந்த ஆசிரியர் பவுல் கூறுவதைக் கவனியுங்கள். முதலாவதாக, விழுந்து போதல் என்னும் கருத்தை அவன் நம்மிலிருந்து எடுத்துப் போடுகிறான் - ''இன்று கிறிஸ்தவனாயிருந்து நாளை விழுந்து போவேன். அடுத்த நாள் தேவன் என்னைக் குற்றப்படுத்துவார். அதற்கடுத்த நாள் மீண்டும் கிறிஸ்தவனாகி விடுகிறேன்'' என்னும் கருத்து, அது அர்த்தமற்றது! இது... இந்த நிருபம் சுவிசேஷ போதனைக்காகவோ, சுவிசேஷப் பிரசங்கத்திற்காகவோ எழுதப்படவில்லை. நாங்கள்... சுவிசேஷ ஊழியத்தின் போது இதை குறிப்பிட்டு பேசுவதே கிடையாது. ஆனால் இந்த சத்தியத்தை நான் சபைக்குக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், அழைக்கப்பட்டு, காக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டு ஏற்கனவே பரிசுத்த ஆவியைப் பெற்று கானான் தேசத்தினுள் பிரவேசித்த பரிசுத்தவான்களுக்கு பவுல் இதை எழுதியுள்ளான். நீங்கள் விழுந்து போனீர்கள். நீங்கள் இழக்கப்பட்டீர்கள், நீங்கள் பயந்திருக்கிறீர்கள் என்னும் எல்லாக் கருத்துக்களையும் உங்கள் சிந்தையை விட்டு முதலாவது அகற்றுங்கள் என்று பவுல் அவர்களிடம் கூறுகிறான். எதற்கும் பயப்படாதிருங்கள், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் யாரென்றும், நீங்கள் எப்படி நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும் அவன் எடுத்துக் கூறுகிறான். 20நீங்கள் ஒருக்கால் தவறான காரியங்களைச் செய்யலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் தவறு செய்யும்போது, அதற்கான கிரயத்தை நீங்கள் செலுத்தியே தீரவேண்டும். ஆம், ஐயா! நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுப்பீர்கள். ஆனால் அதற்கும் உங்கள் இரட்சிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக, தேவனுடைய புத்திரராக ஆகி விடுகின்றீர்கள். நான் ஒரு பிரான்ஹாமாகப் பிறந்தேன். நீங்கள் எனக்கு வேறு பெயர்களைச் சூட்டலாம். அதன் விளைவாக, நான் பிரான்ஹாமாக இருப்பது எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. நான் அப்பொழுதும் பிரான்ஹாமாகவே இருப்பேன். என்றாவது ஒரு நாளில் நான் ஒருக்கால் கீல்வாதத்தினால் அவதியுற்று, உருக்குலைந்து, ஒரு மிருகத்தைப் போல் தோற்றமளிக்கலாம். ஆனால் அப்பொழுதும் நான் பிரான்ஹாமாகவே இருப்பேன். ஏன்? பிரான்ஹாம் இரத்தம் எனக்குள் ஓடுகின்றது. 21அப்படித்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். தேவன் உங்களை... படைத்திருக்கும் வரைக்கும்... கவனியுங்கள், கிறிஸ்துவுக்குப் புறம்பானவர்களிடம் இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களிடமே இதைக் கூறுகிறேன். நீங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள்ளாகின்றீர்கள்? ''ஒரே ஆவியினாலே'' அதாவது ஒரே பரிசுத்த ஆவியினாலே நாம் எல்லாரும் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், ''நாம் எப்படி அதற்குள் நுழைகிறோம்?“, தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமா? பாப்டிஸ்டுகளே, கிறிஸ்து சபையினரே, இவ்விஷயத்தில் நான் உங்களுடன் எவ்வளவாக ஆமோதிக்க முடியாமல் இருக்கிறேன் தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாய் அல்ல, அல்லவே அல்ல! ”ஒரே ஆவியினாலே - பரிசுத்த ஆவியினாலே - நாம் அந்த சரீரத்திற்குள் கொண்டு வரப்படுகின்றோம்'' என்று 1கொரிந்தியர் 12 உரைக்கிறது. அந்த சரீரம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளதோ, அவ்வளவு பாதுகாப்பாக நாமும் இருக்கிறோம். தேவன்... அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். 22அவர் கல்வாரிக்குச் சென்ற பின்பு, தேவன் அவனை எவ்வாறு நியாயந்தீர்க்க முடியும்? அவர் கொல்கதா மலையின் மேல் ஏறிச் சென்ற போது அடிக்கப்பட்டார். நொறுக்கப்பட்டார். அப்பொழுது அவரால் சுகமாக்க முடியவில்லை, ஒரு வார்த்தையும் கூட அவரால் பேச முடியவில்லை. ஏன் தெரியுமா?உலகத்தின் பாவங்களை அவர் தம் மேல் சுமந்திருந்தார். அவர் பாவியாயிருந்தார் என்பதனால் அல்ல. அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் ''பாவமானார்'' ஆதாமின் காலம் தொடங்கி அவர் வரப்போகும் காலம் வரைக்கும் இருந்த எல்லா பாவங்களும் அவர் மேல் தங்கியிருந்தது. தேவன் தமது குமாரனைத் தண்டிக்கவில்லை, அவர் பாவத்தைத் தான் தண்டித்தார். அது (பாவம்) எவ்வளவு பயங்கரமானது, பாருங்கள் நமக்காக அவர் ஒரு பாவநிவாரணத்தை உண்டு பண்ணினார். யார் யாரெல்லாம் வருவார்களென்று தேவன் தமது முன்னறிவினால் அறிந்திருந்தாரோ, அவர்கள் தப்பிப்பதற்கென அவர் ஒரு வழியை உண்டாக்கினார். அதற்கு இன்னும் சில நிமிடங்களில் நாம் வரப் போகின்றோம். 23நாம் ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கும் போது, நாம் என்றென்றைக்கும் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆர்மீனியன் விசுவாசிகளை இது முக்கியமாக தாக்குகின்றது. ஏனெனில், இதற்கு தகுதியாயிருக்க ஏதாவதொன்றை செய்ய வேண்டுமென்று அவர்கள் கருதுகின்றனர். இவ்விரண்டும் ஒரே சமயத்தில் எவ்வாறு இருக்கமுடியும்? ஒன்று அது கிருபையினால் உண்டாயிருக்க வேண்டும், அல்லது கிரியைகளினால் உண்டாயிருக்க வேண்டும். இவ்விரண்டில் ஏதாவதொன்று தான் இருக்க முடியும். இவ்விரண்டும் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் அவைகளில் ஒன்று மாத்திரமே இருக்க முடியும். 24என்னைப் பொறுத்த வரையில், தேவனுடைய கிருபை என்பதைத் தவிர வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை. அதுவே என் கருத்து. நான் எப்பொழுதும் கிருபையில் நம்பிக்கையுடையவன். எல்லாமே கிருபை தான், அவ்வளவு தான், அது வேறொன்றுமில்லை... என் வாழ்க்கையில் நான் சிறுவனாக இருந்த சமயத்திலும் வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை. கிருபை, கிருபை மாத்திரமே. ''நீ என் முதுகைச் சொறி, நான் உன் முதுகைச் சொறிகிறேன்'' என்றல்ல. நீங்கள் என் முதுகைச் சொறிந்தாலும் சொறியாமல் போனாலும் எனக்குக் கவலையில்லை; உங்கள் முதுகைச் சொறிய வேண்டிய அவசியம் - ஏற்படுமானால், நான் நிச்சயம் சொறிந்துவிடுவேன். பாருங்கள். அது தான் கிருபை. ஆம், ஐயா, பாருங்கள், கிருபை அன்பினால் கிரியை செய்கின்றது. உங்களுக்கு அவசியம் ஏற்படுமானால்; அது வரையில் நீங்கள் எனக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கலாம். உங்களிடம் நான் எவ்வித தொடர்பும் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு அவசியம் ஏற்படும் போது, நான் எப்படியும் அதை உங்களுக்கு செய்து தருவேன். அது தான் கிருபை! ஏனெனில் அது உங்களுக்கு அவசியமாயுள்ளது. 25எனக்கு இரட்சிப்பு அவசியமாயிருந்தது. என்னை எதுவுமே இரட்சிக்க முடியவில்லை. அதைக் குறித்து என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, என்னை நானே இரட்சித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கோ இரட்சிப்பு அவசியமாயிருந்தது. ஏனெனில் தேவனில் நான் விசுவாசம் கொண்டிருந்தேன். தேவன் பாவமுள்ள சரீரத்தின் சாயலில் உண்டாக்கப்பட்ட தமது குமாரனை அனுப்பி, எனக்குப் பதிலாக அவர் பாடனுபவிக்கும்படி செய்தார். அதன் விளைவாக, நான் இரட்சிக்கப்பட்டேன். கிருபையினால் மாத்திரமே நான் இரட்சிக்கப்பட்டேன். அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நீங்களும் உங்களை இரட்சித்துக் கொள்ள ஒன்றுமே செய்யமுடியாது. உலகத் தோற்றத்துக்கு முன்பு அவர் எவர்களை முன்னறிந்தாரோ... 26அதைக் குறித்து நாம் கடந்த புதன்கிழமையன்று பார்த்தோம். தேவனை அவருடைய ஏலா, ஏலோகிம் என்பதில் சித்தரித்து, அவர் தனிமையில் வாழ்ந்தார் என்று காண்பித்தோம். அவருக்குள் பிதாத்துவம் இருந்தது. அவருக்குள் இரட்சகர், சுகமளிப்பவர் போன்ற வெவ்வேறு தன்மைகள் இருந்தன. இவையனைத்தும் தேவனுக்குள் இருந்தன. தேவன் தனிமையில் வாழ்பவராயிருந்தார். அப்பொழுது தேவதூதர்களும் கூட கிடையாது, எதுவுமே கிடையாது. அவரைத் தவிர அப்பொழுது வேறொன்றும் இருக்கவில்லை. அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் தேவனாக இருந்த காரணத்தால் அவரை வணங்க ஏதாவதொன்று இருக்க வேண்டும். அவர் ஆராதிக்கப்பட விரும்பினார். எனவே அவரை வழிபடுவதற்கென அவரே தமது சிருஷ்டிகளை சிருஷ்டித்தார். அதை சற்று இப்பொழுது பார்க்கலாம். அதை முழுவதுமாக நாம் திரும்பவும் இப்பொழுது பார்க்க வேண்டாம். உங்களுக்கு அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தேவனாயிருந்தபடியால், அவர் தேவதூதர்களை சிருஷ்டித்தார்; தேவதூதர்கள் அவரை வழிபட்டனர். தேவதூதர்கள் அவரை இன்னும் வழிபடுகின்றனர். தேவனுடைய சமூகத்தில் நிற்கும் தேவ தூதர்களுக்கு ஆறு செட்டைகள் உள்ளன. இரண்டு செட்டைகளால் அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு, இரண்டு செட்டைகளால் கால்களை மூடிக் கொண்டு, இரண்டு செட்டைகளால் அவருடைய சமூகத்தில் பறந்து, ''சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓயாமல் துதித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் வேதம் கூறுகின்றது. அவர்கள் அவரை வழிபடுகின்றனர், அவரை வழிபடுவதற்கென்றே அவர் அவர்களை சிருஷ்டித்தார். 27அவருக்குள் இரட்சகர் என்னும் தன்மை இருந்தது. பாவமோ அல்லது பாவ சிந்தையோ இல்லாத இச்சிருஷ்டிகள் எங்ஙனம் பாவத்தில் விழ முடியும்? முடியாது. எனவே விழுந்து போவதற்கென அவர் ஒன்றை சிருஷ்டித்து, அவர் இரட்சகராக ஆக வேண்டியதாயிற்று. அவருக்குள் சுகமளிப்பவர் என்னும் தன்மை இருந்தது. அவர் இரட்சகர் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அவர் சுகமளிப்பவர் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இரட்சிப்பதற்கோ, சுகமளிப்பதற்கோ ஒன்றுமில்லாமல் போனால் என்ன பயன்? அதற்காக ஒன்று சிருஷ்டிக்கப்பட வேண்டியதாயிற்று. ஆனால் அவர் அவ்விதம் அதை ஏற்படுத்தவில்லை. அவர் மனிதனை சுயாதீன சித்தத்துடன் படைத்தார். இதை நீ ஏற்றுக் கொண்டால் ஜீவிப்பாய், “அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மரிப்பாய்.'' இவ்வுலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் அதே சுயாதீனத்துடன் பிறக்கிறான். தேவன் தமது முன்னறிவின் மூலம் யார் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிந்திருந்தார். 28இக்கூட்டத்திற்கு வந்திருந்த, அல்லது ஒலிநாடாக்களைக் கேட்ட வேத பண்டிதர் ஒருவர் நேற்று என்னிடம், “அப்படியானால் தேவன் எங்கும் பிரசன்னரா (omnipresent)? அவர் எல்லாவிடங்களிலும் இருக்க வேண்டும் அல்லவா?'' என்று கேட்டார். நான், ''எங்கும் பிரசன்னர்'' என்னும் வார்த்தை அளிக்கும் அர்த்தத்தின்படி, அவர் எங்கும் பிரசன்னர் அல்ல. அவர் ஒரு நபராக இருந்து கொண்டு, அதே சமயத்தில் எங்கும் பிரசன்னராக இருக்க முடியாது, அவர் எங்கும் பிரசன்னராயிருப்பாரானால், பின்னை ஏன் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள ஜெபிக்க வேண்டும்? அவர் எங்கும் பிரசன்னராக இருந்தால், அவர் ஒவ்வொரு கீறலையும், மூலையையும், பிளவையும், சரீரத்திலுள்ள ஒவ்வொரு அணுவையும், ஒவ்வொரு தசை நாறையும் - எல்லாவற்றையும் - நிரப்ப வேண்டுமே என்றேன். நான் தொடர்ந்து, அவர் எங்கும் பிரசன்னராக இருப்பாரானால் அவர் ஏன் மோசேயைத் தேட வேண்டும்? அவர் ஏன் ஏதேன் தோட்டத்தில் இங்குமங்கும் ஓடி, ஆதாமே! நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்க வேண்டும்?'' என்றேன். அவர் எல்லாம் அறிந்தவர் (omniscient) என்பதனால் அவர் எங்கும் பிரசன்னராயிருக்கிறார் (omnipresent). அவர் முடிவற்றவர் (infinite) என்பதனால், அவர் எல்லாம் அறிந்திருக்கிறார். அவர் முடிவற்றவராயிருப்பதே அவரை எங்கும் பிரசன்னராக்குகிறது. அவர் எங்கும் பிரசன்னர், முடிவற்றவர். அவர் பரலோகத்தில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு நபராக இருப்பதால், அவர் ஓரிடத்தில் வாசம் செய்கிறார். 29அவர் முடிவற்றவராக இருப்பதால், எல்லாம் அறிந்தவராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒரு கொசு (gnat) கண்ணிமைப்பதையும் கூட அவர் அறிந்திருக்கிறார். தேன் கூட்டிற்குச் சென்று தேனை பருகும் ஒவ்வொரு தேனியையும் அவர் அறிந்திருக்கிறார். மரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அடைக்கலான் குருவியையும் அவர் அறிந்திருக்கிறார். உன் மனதிலுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் அவர் முடிவற்றவர் மாத்திரமல்ல, எல்லாம் அறிந்தவரும் கூட. ஆனால் அவர் ஒரு நபர் (Being). தேவன் ஒரு நபர். இந்த நபர்தான் எல்லாவற்றையுமே தோன்றச் செய்கிறார். 30பாவம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று அன்றிரவு கூறினேன். பரிபூரணமானவைகளைத் தவிர தேவன் வேறெதையும் சிருஷ்டிக்கவில்லை. தேவன் எல்லாவற்றையும் நல்லதாகவே படைத்தார். பாவம் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றல்ல. “அது பாவத்தின் சிருஷ்டிப்பாகும்” என்று கூறக் கேட்டிருக்கிறீர்கள். அது தவறு. சிருஷ்டி கர்த்தர் ஒருவரே, அவர் தான் தேவன். தேவனால் பாவத்தை சிருஷ்டிக்க முடியாது. ஏனெனில் அவர் பரிசுத்தமுள்ளவர். பாவத்தை சிருஷ்டிக்க அவருக்குள் ஒன்றுமில்லை. பாவம் என்பது தாறுமாறாக்கப்பட்ட ஒன்றாகும். (perversion) - சிருஷ்டிப்பல்ல விபச்சாரம் என்பது நீதியான, சட்டப்பூர்வமான செயல் தாறுமாறாக்கப்பட்ட ஒன்று. உண்மை தவறாகக் கூறப்படுதலே பொய். பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுதல். 31தேவன் தம்மை ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டார். அவர் தேவன். அவர் ஏற்கனவே தம்மை இரட்சகராக வெளிப்படுத்தியுள்ளார். மனிதன் தவறிப் போனான். அவரோ அவனை இரட்சித்தார். அவர் ஏற்கனவே தம்மை சுகமளிப்பவராக வெளிப்படுத்தியுள்ளார். அதைக் குறித்து ஜனங்கள் எத்தகைய கருத்து கொண்டிருந்தாலும் கவலையில்லை; அவர் சுகமளிப்பவராகவே இருக்கிறார். அவர் இரட்சகர், அவர் தேவன், அவர் நித்தியமானவர். அவருக்கு ஒரு நோக்கமுண்டு. அவரை நேசிக்கவும், ஆராதிக்கவும், அவர் சிருஷ்டிகளை படைக்க வேண்டும் என்பதே ஆதியில் அவர் கொண்டிருந்த நோக்கமாயிருந்தது. அவர் சிருஷ்டிகளை சிருஷ்டித்தார். ஆனால் சிருஷ்டிகளோ விழுந்து போயினர். தேவனோ முடிவற்றவராய் காலம் என்னும் நதியை அவர் கீழ் நோக்கி, ஒவ்வொரு காலத்திலும் இரட்சிக்கப்படவிருக்கும் ஒவ்வொரு மனிதனையும் கண்டார். தமது முன்னறிவினால் அந்த ஒவ்வொரு மனிதனை அவர் அறிந்தார். எனவே, தமது முன்னறிவின்படி, யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் அறிந்திருந்ததினால் தான், அவர்களை அவர் முன்குறிக்க முடிந்தது, 'முன்குறித்தல்' என்னும் வார்த்தை அவ்வளவு மோசமானது இல்லை அல்லவா? எனவே இரட்சிக்கப்படுபவர்களை அவர் பிடித்துக் கொள்ள, அவர்களுடைய பாவங்களுக்காக அவர் பாவநிவாரணம் செய்ய வேண்டியதாயிருந்தது. ஓ, கூடுமானால் சில வசனங்களுக்கு பின்பு அதை பார்க்கலாம். அவர் நம்மை நித்திய ஜீவனுக்கென்று முன்குறித்தார். எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிடக் கூடியவர்கள் யாரென்று அவர் அறிந்திருந்தார். இவ்வுலகத்தின் பிள்ளைகளுக்கு அது பைத்தியக்காரத்தனமாய் காணப்பட்ட போதிலும், இவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் காரணத்தால், அவர்களுடைய கருத்தைக் குறித்து இவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள். 32தேவன் அவர்களை அழைத்திருக்கிறார். இயேசுவின் இரத்தம் பாவப் பரிகாரமாக இருந்து, பாவத்தைச் கழுவ வேண்டும் என்பதற்கு அவர் இயேசுவை அனுப்பினார். அது எப்பொழுதும் பாவத்தைக் கழுவிக் கொண்டேயிருக்கிறது - எழுப்புதலின் போது ஒருதரம் மாத்திரமல்ல. அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராய், வேண்டுதல் செய்து அதன் விளைவாக கிறிஸ்தவன் இரவும் பகலும் சுத்தமாய் வைக்கப்படுகின்றான். சிலுவையில் சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய சமூகத்தில் இருந்து கொண்டு, நம்மை எப்பொழுதும் - இரவும் பகலும் - எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் பாதுகாப்பாக உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறோம். எப்படி நுழைக்கப்பட்டிருக்கிறோம்? பரிசுத்த ஆவியின் மூலமாய் கர்த்தராகிய இயேசுவின் சரீரத்திற்குள் பாதுகாப்பாக நுழைக்கப்பட்டிருக்கிறோம். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. இனி ஒரு போதும் அவனுக்கு நியாயத்தீர்ப்பில்லை. கிறிஸ்தவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படுவதில்லை. அவனுக்கு பதிலாக கிறிஸ்து நியாயந்தீர்க்கப்பட்டார். என் வழக்கறிஞர் (attorney) என் ஸ்தானத்தில் நின்றார். என் வழக்கை அவர் வாதாடி, நான் குற்றமற்றவன் என்றார். அவர் பிதாவினிடம், நான் தகுதியற்றவன் என்றும், ஒன்றுமே அறியாதவன் என்றும் கூறினார். அவர் என்னை நேசித்து என் ஸ்தானத்தை வகித்து, என் வழக்கை வாதாடினார். இன்று நான் விடுதலையாகியுள்ளேன். ஆம், ஐயா. அவர் பாவங்களுக்காக தமது இரத்தத்தை சிந்தினார். 33நான் சென்ற புதன் இரவு கூறியதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவன் ஒருவனும்... கிறிஸ்தவர்கள் பாவம் செய்கின்றனர். ஆனால் பாவி ஒருவன் பாவம் செய்வதில்லை. ஏனெனில் அவன் பாவியாகவே இருந்து வருகின்றான். அவ்வளவுதான். இந்த புத்தகத்தின் பின்பாகத்தைப் பாருங்கள். அது கறுப்பாய் இருக்கிறது. அதில் எவ்வளவு பாகம் கறுப்பாயுள்ளது: முழுவதுமே கறுப்பாயுள்ளது. அதில் வெள்ளை நிறம் எதுவுமில்லை. அது கறுப்பு நிறமுள்ளது. நீங்கள், “அது இவ்வளவு மாத்திரம் கறுப்பாயுள்ளது' என்று கூற முடியாது. ஏனெனில் அது முழுவதுமே கறுப்பாயுள்ளது, பாவியும் அப்படித்தான் இருக்கிறான். தொடக்கத்திலேயே அவன் குற்றவாளியாயிருக்கிறான். அவன் விபச்சாரம் செய்தால் என்னவாகும்? ஒரு பெண்ணை அவன் கற்பழித்தால் என்னவாகும்? அவன் சூதாடினால் என்னவாகும்? அவன் யாரையாகிலும் சுட்டுக் கொன்றால் என்னவாகும்?'' என்று நீங்கள் கேட்கலாம். அது நம்முடைய வேலையல்ல. அதைக் கவனித்துக் கொள்ள நாட்டின் சட்டதிட்டங்கள் உள்ளன, நாம் சீர்திருத்தவாதிகள் அல்ல, நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்கள். அவன் புரிந்த செயல்களின் நிமித்தம் அவன் மேல் நாம் குற்றஞ்சாட்டுவதில்லை. அவன் விபச்சாரம் செய்தான் என்பதற்காக அவன் மேல் நாம் குற்றஞ்சாட்டுவதில்லை. அவன் பாவி என்னும் காரணத்தால் அவன் மீது குற்றஞ்சாட்டுகிறோம். அவன் கிறிஸ்தவனாக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டான். அது உண்மை. அவனில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அவன் அப்படி செய்திருக்க மாட்டான். அவன் பாவி என்பதனால், அந்நிலை அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 34அது தான் 'லீகலிஸ்டு' (Legalists) கூட்டக்காரரைத் தட்டச் செய்கின்றது. ஆம், ஐயா. சகோதரனே. உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ''கிரியைகளினால் அல்ல, கிருபையினாலே விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம்“, ஆம், ஐயா. நான் 'லீகலிஸ்டு' சகோதரர்களைக் குற்றஞ்சாட்டுவதாக எண்ண வேண்டாம். அவர்கள் என் சகோதரர்கள். மற்றவர்கள் அங்கிருப்பது போல் அவர்களும் அங்கிருப்பார்கள். ஏனெனில் தமது சபை அங்கிருக்க வேண்டுமென்று தேவன் முன் குறித்திருக்கிறார். ஆனால் நீங்கள் ஜனங்களைப் பிரித்து வைப்பதனால், சத்தியம் எதுவென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களிடம் சத்தியத்தை எடுத்துரையுங்கள், அவர்களிடம் உலக வாஞ்சை காணப்படுமானால், தொடக்கத்திலேயே அவர்கள் அங்கில்லை. 35என் மனைவி என்னை விவாகரத்து செய்துவிடுவாள் என்னும் காரணத்தால் அவளுக்கு நான் உண்மையாய் வாழ்வதில்லை. அவளை நான் நேசிப்பதனால் அவளுக்கு உண்மையாய் வாழ்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர் நேசிப்போம் என்று சட்டப்பூர்வமாக நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆனால் அதற்கு முன்பே, அன்பு என்று ஒன்றிருக்க வேண்டும். அவளை நான் நேசிக்கிறேன். நான் அவளுக்கு தவறிழைத்தாலும், அவள் என்னை மன்னித்துவிடுவாள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும், நான் அவளுக்கு தவறிழைக்கமாட்டேன். ஏனெனில் நான் அவளை நேசிக்கிறேன். அவ்வாறே தான் கிறிஸ்துவிடமும் கூட, எனக்கு ஐம்பது வயதாகின்றது நான் தொண்ணூறு அல்லது நூறு வயது வரை வாழ நேரிட்டால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் நான் பிரசங்கம் செய்யலாம். நான் ஒரே ஒரு முறை பிரசங்கம் செய்துவிட்டு, நதியினருகில் சென்று அமர்ந்து கொண்டு, என்னைப் பொறுத்தவரை நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று கூறிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. தேவன் தமது கிருபையினால் என்னை இரட்சித்தார்; அதற்கு நான் தகுதியற்றவன். அதற்கு தகுதியாயிருப்பதற்கு நான் எதையும் இதற்கு முன்பும் செய்ததில்லை, இனி ஒருபோதும் செய்யவும் முடியாது. நான் அவரையும் அவருடைய ஜனங்களையும் நேசிப்பதனால், மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிறேன். அதனால் நான் மரணத்திலிருந்து நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவர்களை நேசித்து அவர்களைப் பின் தொடருகிறேன். அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, அவர்களைப் பின்தொடர்ந்து, எப்படியாயினும் அவர்களை தேவனிடம் இழுத்துக் கொண்டுவர முனைகிறேன். போதகர்களும், மற்றவர்களும் ஸ்தாபனங்களும் நான் கூறுவதை ஆமோதிக்காமல் போனாலும், அது என்னை நிறுத்திவிடுவதில்லை. ஏதோ ஒன்றுள்ளது. அது அவரையும் நிறுத்திவிடுவதில்லை அவர் அவிசுவாசத்தின் மத்தியில் தோன்றினார். அந்த அவிசுவாசம் அவரை நிறுத்திவிடவில்லை. அவர் எப்படியும் தம் பணியை செய்து கொண்டே சென்றார். நாமும் அதையே செய்கிறோம். நாம் சென்று, அவர்களை எப்படியும் தேவனுக்காகப் பிடிக்கிறோம். எதுவாயிருந்தாலும், அவர்களை நாம் அணுகி, நம் முழு பலத்துடன் அவர்களை இறுகப் பிடித்துக் கொள்கின்றோம். அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அவர்களை எப்படியாயினும் இரட்சிப்புக்குள் நடத்துகின்றோம். அது அன்பின் நிமித்தமே. நான் அதை செய்துதான் ஆகவேண்டும் என்னும் கட்டாயத்தினால் அல்ல. நான் நேசிப்பதனால், நீங்கள் நேசிப்பதனால். 36நான், “அந்த ஸ்திரீயிடம் சென்று அவளுடன் சரிசெய்து கொள்ள வேண்டும். நான் சபைக்குச் செல்வதனால் அப்படி செய்யவேண்டும்'' என்று நீங்கள் கூறலாம். முதலில் உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ள வேண்டியது அவசியமாயுள்ளது. பாருங்கள்? பாருங்கள்? உங்கள் இருதயத்தில் தேவனுடைய அன்பை நீங்கள் பெறாமலிருந்தால், உங்களில் ஏதோ தவறுண்டு என்று ஏதோ ஒன்று உணர்த்தினால், நீங்கள் முதலில் தேவனிடம் சென்று அதை சரிசெய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் அயலாரிடம் நீங்கள் சமாதானமாவீர்கள். இயேசுவும் அதையே கற்பித்தார். ''நீங்கள் தேவனுடைய சந்நிதானத்தில் வரும்போது, உங்கள் அயலான் அல்லது சகோதரனுக்கு விரோதமாக எதையாகிலும் கொண்டிருந்தால், முதலில் அவனுடன் ஒப்புரவாகுங்கள்.'' 37வரப்போகும் காலங்களில்; புதன் இரவு நாம் வெளிப்படுதலைக் குறித்து பார்த்தோம். ''தேவனுடைய புத்திரர்கள் வெளிப்படுதல்“ என்பதைக் குறித்து இன்று காலை நாம் தொடர்ந்து பார்ப்போம் - தேவன் எங்கு காத்திருக்கிறார். கடைசி காலத்தில் நாமெல்லாரும் அவருக்கு முன்பாக நிற்போம். தேவ தூதர்கள் விழுந்து போகவில்லை. ஆசீர்வாதங்களை எவ்வாறு அனுபவிக்க வேண்டுமென்று நமக்குத் தெரிந்திருப்பது போல் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் காணாமற் போன நிலையில் எப்பொழுதுமே இல்லை. ஆனால் பாவியாகிய நானோ எங்கிருந்து வந்தேன் என்றும், எந்த கற்பாறையிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். நீங்களும் எதிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். காணாமற்போன நான் மீண்டும் கண்டு பிடிக்கப்படும் போது, தேவனுடைய சமூகத்தில் நாம் நிற்போம். ஓ, அது எப்படிப்பட்ட நாளாயிருக்கும்! 38புத்திர சுவிகாரம் - ஸ்தானத்தில் வைக்கப்படுதல். தேவனுடைய நற்பண்பு கிரியை செய்ய வேண்டியதாயுள்ளது. இதை நான் உங்களிடம் கொண்டு வர முயல்கிறேன். இப்பொழுது நாம் நம் வசனத்திலிருந்து தொடங்குவோம். அதை நான் படிக்க விரும்புகிறேன். (தமிழில் 6-ம் வசனம் - தமிழாக்கியோன்). தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். தம்முடைய சித்தத்தின்படி செய்வதே தேவனுக்குப் பிரியமாயுள்ளது - நம்மை சுவிகாரப் புத்திரராக்கிக் கொள்ளுதல், ஸ்தானத்தில் பொருத்துதல். அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமது சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்துகிறார். முதலாவதாக, அவர் தமது சபையை அழைத்தார்; மெலோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், பாப்டிஸ்டு - அவர்களை அழைத்தார். பின்பு அவர் என்ன செய்தார்? தமது பரிசுத்த ஆவியையனுப்பி அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்தார். 39பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் இதை உங்கள் இருதயங்களிலிருந்து எடுத்துப் போட வேண்டும். அதாவது, பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல. அது ஒரு அனுபவம். அது பரிசுத்த ஆவி. அது ஸ்தாபனமல்ல. நீங்கள் பரிசுத்த ஆவியை ஸ்தாபனமாக்கிக் கொள்ள முடியாது. அவர் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார். நீங்களோ பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனத்தைக் கொண்டவர்களாயிருக்கின்றீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியோ அதனின்று வெளியேறி நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை அமரும்படி அனுமதித்து அவர் சென்று கொண்டேயிருக்கிறார். பாருங்கள்? பெந்தெகொஸ்தே ஒரு ஸ்தாபனமல்ல. பெந்தெகொஸ்தே ஒரு அனுபவம். 40தேவன் தமது பிள்ளைகளுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் புது பிறப்பைக் கொடுத்தார். அவர்கள் நசரீன்கள், பரிசுத்த யாத்திரீகள் மூலம் தங்களைச் சுத்திகரித்துக் கொண்ட போது, அதன் அருகாமையில் வந்தனர். பின்பு அவர்கள் பெந்தெகொஸ்தே அனுபவத்திற்குள் வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், வரங்களை மீண்டும் பெற்றனர். அவர்கள் அந்நிய பாஷை பேசி, பாஷைகளுக்கு வியாக்கியானம் உரைத்து, அற்புதங்களையும் அடையாளங்களையும் பெற்றிருந்தனர். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர்கள் கிறிஸ்துவுக்குள் தங்கள் ஸ்தானத்தை வகித்தனர். மறுபிறப்பின் மூலம் அவர்கள் பிள்ளைகளாயினர். மறுபிறப்பும் மனம் மாறுதலும் பரிசுத்த ஆவியின் மூலமே. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் மனம் மாறவே முடியாது. அப்படித்தான் வேதம் கூறுகிறது. அப்படித்தான் இயேசு பேதுருவிடம் கூறினார். யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். உங்கள் வேதாகமத்தைப் படித்துப் பாருங்கள். பேதுரு இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததினால் நீதிமானாக்கப்பட்டு அவரைப் பின்பற்றும் ஒரு அப்போஸ்தலனானான், இயேசு அவனிடம் ராஜ்யத்தின் திறவு கோலைக் கொடுத்தார். அவர் அவர்களைப் பரிசுத்தமாக்கினார். அவர் அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்து, வெளியேயனுப்பி, பிசாசுகளைத் துரத்தவும், மற்ற செயல்களைப் புரியும்படியும் செய்தார். அவர்களை அவர் பரிசுத்தமாக்கினார், உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாகும்; “உம்முடைய வசனமே சத்தியம்... அவர்களுக்காக நான் என்னைத் தானே பரிசுத்தமாக்குகிறேன்.'' 41நான் இதுவரை கேட்டிருக்கும் மிக இனிமையான வார்த்தைகளில் இது ஒன்றாகும். “பிதாவே, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். ஒரு குடும்பத்தைப் பெற்றுக் கொள்ள அவருக்கு உரிமையிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு மனிதர் தானே! ஒரு மனைவியைக் கொள்ள அவருக்கு ஏன் உரிமை இருந்தது தெரியுமா? அவர் ஒரு மனிதர் என்னும் காரணத்தால். இவையனைத்திற்கும் அவருக்கு உரிமையிருந்தது. ஆனால் அவரோ, ''பிதாவே, அவர்களுக்காக நான் என்னைத் தானே பரிசுத்தமாக்குகிறேன்'' என்றார். 42நான் ஒரு சிறு போதகருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன், இன்னும் சில நாட்களில், அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவருடைய சபையில், அவருடைய அழைப்புக்கிணங்கி பேசப் போகின்றேன், ஒரு காரியத்தைக் குறித்து அவரிடம் நான் கேட்டேன் அவரோ, “ஆம், சகோ. பிரான்ஹாம், ஆனால் என் சபையார் பெரும்பாலோர் அதை நம்புவது கிடையாது'' என்றார். நான், ''ஏறக்குறைய அவர்கள் அனைவருமே லீகலிஸ்டுகள் தாம்'' என்றேன். அவர், ''ஆம். சகோதரனே, அவர்கள் விசுவாசிப்பதில்லை“ என்று கூறிவிட்டு, ''ஆனாலும் அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்கிறேன்'' என்றார். அதைக் கேட்டபோது, அவரைக் கட்டித் தழுவ வேண்டும் என்னும் எண்ணம் எனக்குள் தோன்றினது. 43இயேசு பன்னிரண்டு பேருக்குப் பயிற்சியளித்து, இந்த பன்னிருவர் மூலம் சுவிசேஷம் உலகெங்கும் செல்ல வேண்டுமெனும் எண்ணங்கொண்டார். அவர், ''அவர்களுக்காக நான் என்னைத் தானே பரிசுத்தமாக்குகிறேன்“ என்றார். நீங்களும் அவ்வாறே உங்கள் அயலாருக்காக அல்லது வேறு யாருக்காகிலும் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள், ”உங்கள் சுயாதீனத்தை மூடலாகக் கொண்டிராமல் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்'' என்கிறான் பவுல். உங்கள் அயலாரிடம் நல்ல கிறிஸ்தவர்களாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பாஷணை... உங்கள் விரோதியை நீங்கள் சந்திக்க நேரிட்டால், அவன் நிமித்தம் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள், அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று அறியாமலிருக்க வேண்டாம். 44தேவனுடைய புத்திரனை அவனது ஸ்தானத்தில் வைத்தல். ஒரு மகனுடைய நடத்தை பரிசோதிக்கப்பட்ட பின்பு, அது சரியென்று காணப்பட்டால், அவன் சுவிகாரப் புத்திரனாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றான். பெந்தெகொஸ்தேயினரை... பெந்தெகொஸ்தே ஒரு ஸ்தாபனமல்ல என்பதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். இங்குள்ள பாப்டிஸ்டுகளில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களையுயர்த்துங்கள் பார்க்கலாம்! பார்த்தீர்களா? இங்கு வந்துள்ள மெதோடிஸ்டுகளில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களையுயர்த்துங்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள பிரஸ்பிடேரியன்கள். பாருங்கள்?லூத்தரன்கள், பெந்தெகொஸ்தே ஸ்தாபனமில்லாமல் மற்ற ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களாயிருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளவர்கள் உங்கள் கரங்களையுயர்த்துங்கள் பார்க்கலாம்! பார்த்தீர்களா? அப்படியானால் பெந்தெகொஸ்தே ஒரு ஸ்தாபனமல்ல, அது ஒரு அனுபவம். 45தேவன் உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஏற்றுக் கொண்டார். அவர் என்ன செய்கிறார்? நீங்கள் உங்கள் நல்நடத்தையினால் நிரூபித்து. உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு, உலகம் என்ன கூறினபோதும் பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிந்தீர்கள். 46இதை சற்று ஆணித்தரமாகக் கூறப் போகின்றேன். நான் கடூரமாக இருப்பதாக தயவு செய்து எண்ணாதீர்கள், நான் நீசத்தனமாக இருப்பதாக எண்ண வேண்டாம். எனக்கு வருத்தத்தை அளிப்பது என்னவெனில், தேவனால் அனுப்பப்பட்ட இந்த சத்தியத்தை ஜனங்களுக்கு நான் போதித்த பிறகும், அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியைத் தாங்கள் பெற்றுக் கொண்டதாக கூறிக் கொள்ளுதலே. அது என்னை ஏறக்குறைய அழித்துவிடுகின்றது. பாருங்கள்? ஜனங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? அவர்கள் மீண்டும் அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கின்றனர். எவ்வாறு இஸ்ரவேல் புத்திரர், அமோரியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் போன்ற ஜாதியினரைப் போல் தங்களை ஆள ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களோ, அதுபோன்றே இவர்களும் இருக்கின்றனர். 47ஸ்திரீகளே, ஆண்களின் சட்டையை (slacks) நீங்கள் உடுப்பது தவறென்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கூந்தலைக் கத்தரிப்பது தவறென்று உங்களுக்குத் தெரியுமா? மிஸ்டர், புகை பிடித்து நீ நடந்து கொண்டிருக்கும் விதத்தில் நடப்பது தவறென்று உனக்குத் தெரியுமா? உன் மனைவிக்கு புருஷனாக இராமலிருப்பது தவறென்று உனக்குத் தெரியுமா? உன் மனைவிக்கு கோபம் வரும்போது, அவள் உன்னை உதைத்து வீட்டுக்கு வெளியே துரத்தி விட்ட பின்பு, “அன்பே, அது பரவாயில்லை. நான் உள்ளே வரட்டுமா?'' என்று நீ கேட்பது தவறென்று உனக்குத் தெரியுமா?... உன் குடும்பத்தின் மேல் உனக்கு ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருக்கும்போது, தேவனுடைய வீட்டின் காரியங்களை நீ எவ்வாறு கண்காணிக்க முடியும்? அது முற்றிலும் உண்மை. சகோதரியே, உன் புருஷன் உனக்குப் புருஷன் மாத்திரமல்ல, அவன் உன்னை ஆளுகை செய்பவன் என்று உனக்குத் தெரியுமா? தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ஏனெனில் புருஷன் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயே வஞ்சிக்கப்பட்டாள். இருப்பினும்,போதகர்களாகிய நீங்கள், தேவனுடைய வார்த்தை பெண் போதகர்களை நியமிப்பதில் எதிராயுள்ளது என்று அறிந்த பின்பும், அவர்களை உங்கள் சபைகளில் தொடர்ந்து நியமித்துவிடுகின்றீர்கள். 48நீங்கள் தொடர்ந்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை ஞானஸ்நானத்தில் உபயோகித்து வருகின்றீர்கள். அதற்கு வேதத்தில் ஒரு சிறிய ஆதாரமும் கூட கிடையாது. ''பிதா, குமாரன், பரிசுத்தஆவி நாமத்தினால் வேதத்தில் யாராகிலும் ஞானஸ்நானம் பெற்றனரா என்று தலைமை பேராயர் ஒருவராவது எனக்குக் காண்பிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெதாவது முறையில் வேதத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா என்று யாராகிலும் ஒருவர் என்னிடம் காண்பிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். யோவான் ஸ்நானன் அம்முறையில் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. இயேசு வரப் போகிறார் என்று விசுவாசித்து அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். ஆனால் அவர் யாரென்று அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அதை கண்டுகொண்டவுடன், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. யாராகிலும் ஒருவர்... நான் தேவ சபை (Assemblies of God)யினரைக் கேட்டுப் பார்த்துவிட்டேன்; பிரஸ்பிடேரியன் சபை போதகர்களையும் கூட, ஆனால் அவர்களோ அதைக் குறித்து மெளனமாயுள்ளனர். அதற்கு ஆதாரமாயுள்ள வேத வாக்கியத்தை நான் காண விரும்புகிறேன். அவர்கள் என்னை, “மூடபக்தி வைராக்கியமுள்ளவன்'', ''பைத்தியக்காரன்'', ''புத்தி சுவாதீனமில்லாதவன்”, என்றெல்லாம் அழைக்கின்றனர். ஏன்? உங்களுக்கு நான் சத்தியத்தை எடுத்துக் கூற முனைவதனாலா? சகோதரரே, அது உண்மை. ஒரு மனிதன் தன்னை முற்றிலுமாய் தேவனுக்கு அர்ப்பணிக்கும் போது, அவன் அவருக்கென்று தனியே ஒதுக்கப்படுகின்றான். அப்பொழுது நீங்கள் வித்தியாசமான சிருஷ்டிகளாகின்றீர்கள். 49அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். அநேகர் அழைக்கப்பட்டனர். உங்களுக்கு இருதயத்தில் ஒரு அழைப்பு ஏற்படுகின்றது. ''ஆம், தேவன் என்னை நேசிக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். அவர் என்னை நேசிக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்.'' ஆனாலும் சகோதரனே, நீயும் மற்றவர்களைப் போல் அதை இழந்துவிடப் போகின்றாய். ஏனெனில் அவர்கள் அந்நாளில் வந்து, “கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமே. உமது நாமத்தினாலே நாங்கள் எல்லாவற்றையும் செய்தோமே. நாங்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தினோமே, நாங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தோமே, நாங்கள் பிசாசுகளைத் துரத்தினோமே'' என்பார்கள். அப்பொழுது இயேசு, “மாய்மாலக்காரரே, என்னை விட்டு - அகன்று போங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனை மாத்திரமே நான் அறிந்திருக்கிறேன்'' என்பார். ஜனங்களால் ஏன் அதை புரிந்து கொள்ள முடியவில்லை? அது உங்களை உறுத்துகிறது என்று எனக்குத் தெரியும். உங்களைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் சகோதரனே, நான் - நான்... 50நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. தேவன் சுவிகாரப் புத்திரராக்கிக் கொண்டு, சபையை கிறிஸ்துவின் சரீரத்தில் அதன்தன் ஸ்தானத்தில் பொருத்துகின்றார். அவர் அநேகரை அதில் பொருத்துவதுமில்லை. அதை ஆரம்பத்திலேயே உங்களிடம் கூறிவிடுகின்றேன். ''அங்கு திரளான பேர் இருப்பார்கள்'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் அவர்களை வெளியே இழுப்பதற்கு அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் இருந்தன. உயிர்த்தெழுதல் நிகழும். அப்பொழுது நாம் அவர்களுடன் கூட எடுத்துக் கொள்ளப்படுவோம். ஒரு சிலர் மாத்திரமே பாருங்கள்! எனவே உங்கள் இரட்சிப்பை நீங்கள் உடனே தேடுங்கள். உங்களை நீங்கள் ஆராய்ந்து, தவறு எங்கு நேர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள்? என்ன காரியம் என்பதைக் கண்டு கொள்ளுங்கள். சகோதரனே, அது மிகவும் கடினம். ஆனால் அது உண்மை. அது தேவனுடைய சத்தியம். புத்திரசுவிகாரம்! 51நாம் தேவனுக்காக மிகுந்த அனல் கொண்டவர்களாய், இரவும் பகலும் சென்று கொண்டேயிருக்க வேண்டும். ஒன்றுமே நம்மை தடுத்து நிறுத்தக் கூடாது. நாம் மிகவும் இனிமையாகவும், அன்பாகவும், தயவாகவும், கிறிஸ்துவைப் போலவே நமது வாழ்க்கையில் காணப்பட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கை அவ்வாறு அமைந்திருக்க வேண்டும். இயேசு கூறினார்: ''காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை.'' சாலொமோன் அழகான சித்திரத்தையலாடை கொண்ட பட்டாடைகளை உடுத்தியிருந்தான், ஆனால் இயேசு அதை இங்கு குறிப்பிடவில்லை. ஒரு லீலிப் புஷ்பம் வளர வேண்டுமானால் அது இரவும் பகலும் உழைக்க வேண்டும். இந்த ஜெப வரிசையின் கடைசியில் நின்று கொண்டு நீங்கள் முன்னால் வர விரும்பும் காரணம் என்ன? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் (அதாவது அவிசுவாசி) எங்கே நிற்பான்? - அதாவது தேவனுடைய வார்த்தையைக் கேட்டும் அதன் வழியில் நடக்க மறுக்கிற மனிதன். நாம் என்ன செய்யப் போகிறோம்? பாருங்கள்? 52இது நமது சபை. இங்கு ஒருக்கால் நான்கு அல்லது ஐந்து அந்நியர்கள் வந்திருக்கக் கூடும், ஆனால் இது என் சபை. இந்த என் சபைக்கு நான் போதித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகின்றது. இந்த செய்தியை ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகின்றது. இந்த செய்தியை ஒலி நாடாவில் கேட்பவர்களுக்கு நான் கூற விரும்புகிறதாவது: இது என் சபைக்கே, நான் வெளியே சென்று பிரசங்கிக்கும் போது, பால் போன்ற மிருதுவான அவர்களுடைய கருத்துக்களில் அவர்கள் நிலைத்திருக்கலாம் என்று கூறி விட்டு, ஒரு சான்றோனைப் போல் (gentleman) இருக்க முயல்கிறேன். ஆனால் சத்தியத்தை ஆணித்தரமாக கூற வேண்டிய நிலை ஏற்படும் போது நாம் அதை அவ்வாறே, எவ்வித மாற்றமுமின்றி, ஜனங்களின் முன்னிலையில் வைப்போம். 53புத்திர சுவிகாரம், ஸ்தானத்தில் வைத்தல் அவர்கள் எங்கேயுள்ளனர் என்பதை எனக்கு காண்பியுங்கள். தேவன் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, தமது பிள்ளைகளை தனியே கொண்டு வருகிறார். அவர்களுக்கு ஒரு வார்த்தையும் கூட கூற வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒன்று நிகழ்ந்ததை அவர்கள் காண்கின்றனர். தமது மகனை அவர் அவனுடைய ஸ்தானத்தில் வைத்து அவனை ஒழுங்கில் கொண்டு வருகிறார். அவன் அதிகாரம் வகிக்கிறான். அவனுடைய வார்த்தை ஒரு பிரதான தூதனின் வார்த்தையை விட மேலானது. ஒரு மகன் சுவிகரிக்கப்பட்டு, உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு, அவனுடைய மேலங்கி மாற்றப்பட்டு, வேறொரு நிறமுள்ள அங்கி அவனுக்கு அளிக்கப்படுகின்றது. தகப்பன் வைபவம் ஒன்றை நடத்தி, “இவன் என் மகன். இன்று முதல் இவன் அதிகாரியாகின்றான். இவன் ஆளுகை செய்வான். என் உடமைகள் அனைத்திற்கும் இவன் அதிகாரி. எனக்குள்ளதெல்லாம் இவனுடையது'' என்று பிரகடனம் செய்கிறான். அது உண்மை. 54இப்பொழுது நாம் தனிமையில் வாழ்ந்த ஏல், ஏலா, ஏலோகிமுக்கு சென்று, அங்கிருந்து சிருஷ்டிகளை படைத்த யேகோவாவுக்கு வருவோம். அவர் மனிதனுக்கு பூமியின் மேல் ஆதிக்கத்தைத் தந்தார். இப்பொழுது நாம் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்? தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக. பூமியே அதற்காக தவித்துக் கொண்டிருக்கிறது. அதை நாம் படிப்போம். பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபை என்ன? அவர் பிதாவாக இல்லாத அந்த காலத்திலேயே அவருடைய கிருபையின் அன்பு அவருக்கு பிள்ளைகள் இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து, தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக நாம் சுவிகாரப் புத்திரராகும்படி அவர் முன் குறித்திருக்கிறார். பாருங்கள்? பிரியமானவருக்குள்... நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய் முன் குறித்திருக்கிறார். அவர் நம்மை எப்படி ஏற்றுக் கொண்டார்? நாம் எப்படி அவருக்குள் வருகிறோம்? ஒரே ஆவியினாலே அவருக்குள் நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். கவனியுங்கள். ...இவருடைய இரத்தத்தினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 55பாவ நிவாரணம் ஒன்று எங்காவது இல்லாமல், நீங்கள் எப்படி தேவனுடைய முன்குறித்தலைப் பற்றியும், அவருடன் வீற்றிருத்தலைப் பற்றியும் போதிக்க முடியும்? நீங்கள் தினந்தோறும் தவறு செய்கின்றவர்களாய் இருக்கின்றீர்களே! ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்த ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பீர்களானால், நீங்கள் தவறு செய்ய நேரிட்டால், உங்கள் தவறுகளுக்காக நீங்கள் விசனப்படுவீர்கள் என்று தேவன் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜனாதிபதி ரூஸ்வெவ்ட் அல்லது எவருடைய முன்னிலையிலும் நின்று, “நான் தவறு செய்துவிட்டேன். தேவன் என்னை மன்னிப்பாராக'' என்று உங்களால் கூற முடியும். ஏன்? அங்கு தான் பாவநிவாரணம்... அங்கு 'பாவங்கள்' (sins) என்பதைப் பார்த்தீர்களா? (ஆங்கிலத்தில் “forgiveness of sins” என்று எழுதப்பட்டுள்ளது. அது தமிழில் பாவமன்னிப்பு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ஒரு பாவி பாவியாகவே இருக்கிறான். அவன் பாவங்கள் செய்வது கிடையாது. ஆனால் சபையோ பாவங்கள் செய்கின்றது. அதற்கு தவறான எண்ணங்கள், தவறான அபிப்பிராயங்கள் போன்றவை தோன்றுகின்றன. ஒரு சிறு குழந்தை நடக்க பழகும் போது எவ்வாறு தள்ளாடுகின்றதோ, அது போன்று சபையும் தள்ளாடுகின்றது. அவன் சிறு குழைந்தையாயிருப்பதால், அவனுக்கு இன்னும் சரியாக நடக்கத் தெரியவில்லை. ஆனால் நம்மை பிடித்து நேராக நிறுத்தி, ''மகனே, இந்த வழியில் அடியெடுத்து வை“, என்று கூறி நம்மை கைபிடித்து வழி நடத்துவதற்கு ஒரு கரம் நமக்குண்டு. நாம் தவறு செய்கிறதினால் அவர் நம்மை அடிப்பதில்லை. நாம் நடக்கப் பழகிக் கொண்டிருப்பதனால், நாம் சாகும் வரை அவர் நம்மை அடிப்பதில்லை. நமது பிள்ளைகளை நாம் எவ்வாறு நேசிக்கிறோமோ அவ்வாறே அவரும் நம்மை நேசிக்கிறார். 56ஒரு குழந்தை நடக்கப் பழகும் போது தரையில் விழ நேர்ந்தால், உண்மையான தந்தை எவனும் அந்த குழந்தையை அதற்காக அடிக்கமாட்டான். அதற்கு பதிலாக அவன் தன் பலத்த கரத்தை நீட்டி அக்குழந்தையை தூக்கியெடுத்து, தன் இரு கரங்கினாலும் அவனைப் பிடித்துக் கொண்டு, ''மகனே, இப்படி நடக்க வேண்டும்'' என்று அதற்கு சொல்லி கொடுப்பான். தேவனும் அவ்வாறே சபைக்குச் செய்து வருகிறார். அவர் தம் கரத்தை நீட்டி தூக்கியெடுத்து, ''மகனே, இப்படி நட“ என்று கற்பிக்கிறார். அவர், ”ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நீ இப்படி சொல். என் வார்த்தை இப்படி கூறினால், அதில் உறுதியாய் நின்று அதன்படி நட, அதில் நிலைகொள். மற்றவர்கள் என்ன கூறினாலும் கவலைப்படாதே. அதில் உறுதியாய் நில். இப்படி நட. இப்படித்தான் உன் அடிகளை எடுத்து வைக்க வேண்டும்'' என்று கூறுவார். 57நம்முடைய பாவங்களுக்காக பரிகாரம். நம்முடைய பாவங்களின் நிமித்தம் அன்பு இல்லையேல் நமக்கு தருணமே இருந்திருக்க முடியாது. அந்த வார்த்தையில் நாம் எவ்வளவாக நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும்! ...அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படி அந்த கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். ''பெருகப் பண்ணுதல் (abound) என்றால் என்ன? ஓ, என்னே!'' பெரிய குவியலாக குவித்து அதை பெருகப் பண்ணினார். “சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணினார்''... சகல ஞானத்தோடும், உலகப் பிரகாரமான ஞானமல்ல. இவ்வுலகத்தின் ஞானம் அவருக்குப் பைத்தியமாய் காணப்படுகின்றது. அவ்வாறே தேவனுடைய ஞானமும் இவ்வுலகத்திற்கு பைத்தியமாய் தோன்றுகிறது. பகலும் இரவும் போல், ஒன்று மற்றொன்றுடன் இணங்குவதில்லை. ஆனால் சூரியன் உதித்து காலை தோன்றும்போது, இரவு இடம் விட்டு இடம் மறைந்து போகின்றது. அவ்வாறே சுவிசேஷத்தின் ஒளி உள்ளே நுழையத் தொடங்கும் போது, உலகத்தின் காரியங்கள் அனைத்தும் மறையத் தொடங்குகின்றன. அவர் என்ன செய்கின்றார்? அவர் சூரிய ஒளியை தமது பிள்ளைகளின் மேல் பெருகப்பண்ணி அவர்கள் தேவனுடைய ஆவியில் நடக்கும்படி செய்து, தேவனுடைய ஆவி அவர்களை வழிநடத்தி, சகல கிருபையினாலும் அவர்கள் பெருகினவர்களாய் சகல ஞானத்தோடும், புத்தியோடும், புரிந்து கொள்ளுதலோடும், பகுத்தறிவோடும், எப்படி நடக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களாய் இருக்கின்றனர். அது தவறென்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதைக் குறித்து கவனமாயிருக்கின்றீர்கள். அது தவறென்று உங்களுக்குத் தெரிந்தால் அதை அணுகவும் கூட நீங்கள் கவனமாயிருக்கின்றீர்கள், ஞானம் (prudence)! அதை எப்படி அணுக வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் உறுதியுள்ளவர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் சர்ப்பங்களைப் போல் வினாவுள்ளவர்களாவும், புறாக்களைப் போல் கபடற்றவர்களாயும் இருக்கின்றீர்கள். அப்படி இருக்க வேண்டுமென்று இயேசு கூறியுள்ளார். 58ஓ, நண்பர்களே! இவையனைத்தும் பொற்கட்டிகள் (nuggets). நாளுக்கு நாள் இதிலேயே நாம் நிலை கொண்டிருக்க முடியும். இவை அருமையானவை அல்லவா? ஞானம், புத்தி இவைகளை அவர் நம்மிடத்தில் பெருகப் பண்ணி, நம்மேல் ஊற்றியிருக்கிறார். ஒரு கரண்டியளவு மாத்திரம் அவர் கொடுக்கவில்லை. அவர் நீண்ட பிடியுள்ள மண்வெட்டியில் (shovel) தோண்டி, அதை நம் மேல் எறிந்து கொண்டேயிருக்கிறார். அந்த கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் நம்மிடத்தில் பெருகப் பண்ணினார். ஓ, அதிசயமான கிருபை எவ்வளவு இனிமையானது! அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணினார்... தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். அவர் யாருக்கு இதை அறிவிக்கிறார்? ஸ்தாபனங்களுக்கா? என் சகோதரரே, நான் ஸ்தாபனங்களை இழிவாகப் பேசுகிறேன் . என்று தயவுகூர்ந்து எண்ண வேண்டாம். நான் அப்படி பேசவில்லை. ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்வது தவறு என்பதை சுட்டிக் காட்டவே முனைகிறேன். இயேசு, “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறினார். நாமோ சென்று ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டோம். நம்மிடையே அது இல்லாமல் போன காரணம், நாம் மனிதனுடைய ஞானத்தைப் பின்பற்றி நடக்கின்றோம். கால்வின் உயிரோடெழுந்தால்... 59அண்மையில் ஒரு மகத்தான சீர்திருத்தக்காரரின் கல்லறையினருகில் நின்றுகொண்டு, “அவர் எவ்வளவு மகத்தானவர்'' என்று யோசித்தேன். ஆம், அவர் மகத்தானவர். அவர் தான் ஜான் வெஸ்லி. ஜான் வெஸ்லி மாத்திரம் இப்பொழுது உயிரோடெழுந்து, அவருடைய சபையின் நிலையைக் காண நேர்ந்தால், அவர் வெட்கமடைவார் என்று எண்ணினேன். ஜான் வெஸ்லி தேவ பக்தியுள்ளவர். அவர், ''சத்தியத்தை அனல் கொண்டு பிரசங்கிப்பவர்'' (fire brand) என்று அழைக்கப்பட்டார். அவர் பரிசுத்தமுள்ளவர். அவர் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து, ஒவ்வொரு அடியும் அவர் பின்னால் சென்றார். ஆனால் ஜான் வெஸ்லி மரித்த பின்பு அவரைப் பின்பற்றினவர்கள், ”நாம் ஜான் வெஸ்லிக்கு ஒரு சபையை ஏற்படுத்திக் கொள்வோம், அப்பொழுது நமக்கென்று ஒரு சபை இருக்கும். அதை நாம் மெதோடிஸ்டு சபை என்றழைப்போம். ஏனெனில் அவர் பிரசங்கித்த 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்னும் உபதேசம் கிருபையின் இரண்டாம் கிரியையாயுள்ளதே'' என்றனர். அவர்கள் அவ்வாறே ஒரு சபையை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் இன்று அதை சார்ந்தவர்கள் ஜான் வெஸ்லி உறுதியாக நின்ற எல்லா சத்தியங்களையும் மறுதலிக்கின்றனர். ஜான் வெஸ்லி தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்தார், அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் வரங்கள் புதுப்பிக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஜான் வெஸ்லி, மார்டின் லூத்தர் போன்ற அநேக மகத்தானவர்கள் அந்நிய பாஷை பேசி அதற்கு வியாக்கியானம் அறிவித்தனர். ஆனால் இன்றைக்கு நீங்கள் மெதொடிஸ்டு அல்லது லூத்தரன் சபையில் அந்நிய பாஷை பேசி பாருங்கள் அவர்கள் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். காரியம் என்ன? தேவனுடைய புத்திரர்களை அவர்களுடைய ஸ்தானத்தில் பொருத்த வேண்டிய இத்தருணத்தில்; காரியங்கள்? அவர்கள் வேறெதோ ஒன்றை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஏனெனில் தேவனுடைய இரகசியத்தை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்கள் அதை வேத பள்ளிகள் மூலம் அறிந்து கொள்ள முடியாது. 60இங்கு வேறொரு வேத வாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன், பரவாயில்லையா? சரி, நாம் இப்பொழுது வேதாகமத்தை திருப்புவோம். ஒரு வசனத்தை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். பவுல் என்ன செய்தான் என்று பார்ப்போம். அவன் தான் இந்தச் செய்தியை நமக்குப் போதிப்பவன். ஒரு நிமிடம் அப். 9.5-க்கு வேதத்தை திருப்புவோம். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.), நான் நேரம் கடந்து விடும் போது எனக்குத் தெரியப்படுத்துங்கள். சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறி... ஓ, கோனை மூக்குடைய மூர்க்க சுபாவமுள்ள அந்த நீசமான யூதன்... பிரதான ஆசாரியர்களிடத்திற்குப் போய், ...தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். நான் அங்கு செல்கிறேன், “அவர்களை மாத்திரம் கண்டு பிடிக்கட்டும்'' என்று அவன் சபதமிட்டான். ஆனால் அவனோ முன்குறிக்கப்பட்டவன். 61அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருப்பவன் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவனா இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அங்கு வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் விலைமாதுவினிடம் நீங்கள் பேசவும் பயப்படுகின்றீர்களே, அவளிடம் கை குலுக்கி சபைக்கு வரும்படி அழைப்பு விடுத்தால், அது அவளை மகிமையில் தேவனுடைய பரிசுத்தவாட்டியாக ஆக்கும் வாய்ப்புண்டா இல்லையாவென்று உங்களுக்கு எப்படி தெரியும்? அதுதான் நமக்குத் தெரியாது. ஆனால் அவ்விதம் அழைப்பு விடுப்பது நமது கடமையாகும். ஒரு செம்படவன் கடலில் வலையைப் போட்டு இழுக்கும் போது தவளைகள், மீன்கள், நீர் பல்லிகள், நீர் சிலந்திகள் போன்ற எல்லாமே வலையில் அகப்பட்டுக் கொள்கின்றன. ஆனால் அவைகளில் சில மாத்திரமே மீன்கள். அந்த செம்படவனுக்கு என்னவெல்லாம் வலையில் அகப்படும் என்று தெரியாது. அவன் வலையை கடலில் விரிக்கிறான். நாமும் அதை தான் செய்கிறோம். இப்பொழுது பவுலைக் கவனியுங்கள். இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வரும்படி தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.( ஓ, சகோதரனே, அவன் மிகவும் கொடூரமானவன்). அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடுதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது... அப்பொழுது டாக்டர் எப். எப். ஜோன்ஸ் என்னும் குருவானவர் அந்த சாலையில் வந்து அவனிடம், ''மகனே, உனக்கு வேதாகமப் பள்ளி அனுபவம் இப்பொழுது அவசியமாயுள்ளது. தேவன் உன்னை உபயோகிக்க முடியுமென்று நம்புகிறேன்,'' என்றா எழுதப்பட்டுள்ளது? அப்படி எழுதப்பட்டிருந்தால், படிப்பதற்கு அது மிகவும் பயங்கரமான ஒரு வேதவாக்கியமாக அமைந்திருக்கும் அல்லவா? நான் இதை வேடிக்கையாக கூறவில்லை. இன்று அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. ''உனக்குத் தெரியுமா? உன் தாயார் மிகவும் நல்லவர். எனவே நீ நல்ல பிரசங்கியாவாய் என்று நம்புகிறேன்'' என்றெல்லாம் கூறுகின்றனர். 62என்ன நேர்ந்ததென்று கவனியுங்கள்! அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடுதியில் வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. (வீயூ, இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றுடன் தொடங்குகின்றது). அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்டுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது, அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 63அவனுடன் கூட பிரயாணம் பண்ணின மனிதர்கள் அவனுடன் சென்றனர். அப்பொழுது அவர்கள் ஒரு மனிதனை (அனனியாவை) கண்டனர். இந்த அனனியா ஒரு தரிசனம் கண்டான். எல்லாமே இயற்கைக்கு மேம்பட்டவை. அந்த சவுல், அந்த நீசமானவன்! அனனியா தன் வீட்டில் ஒரு தரிசனம் கண்டான். அவன் தீர்க்கதரிசி. அவன் வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு தரிசனம் கண்டான். கர்த்தர் அவனுடன் பேசி, ''வெளவாலைப் போல் குருடாயுள்ள ஒரு மனிதன் வீதியில் வந்து கொண்டிருக்கிறான். அவனுடைய பெயர் சவுல். அவன் தர்சு பட்டினத்தான்'' என்றார். அனனியா, ''ஆண்டவரே, அவனைக் குறித்து அநேக விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை அனுப்பாதேயும். நான் சிறியவன். என்னை அனுப்பாதேயும்'' என்றான். கர்த்தர், “அவன் பிரயாணப்பட்டு வந்து கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு தரிசனம் காண்பித்தேன். அவனுக்கு நான் அக்கினி ஸ்தம்பத்தில் தரிசனமானேன். அவனை அடித்து குருடாக்கினேன். அவனை முக்கியமானவனாகச் செய்யும் முன்பு அவனை குருடாக்கி கிழித்தெறிய வேண்டியதாயிருந்தது. பார், அவனுடைய வேதசாஸ்திரம் அனைத்தையும் நான் கிழித்தெறிய வேண்டியதாயிருந்தது. அந்த சபைகளில் ஒன்றில் அவன் பெரியவனாயிருந்தான். அவன் எல்லாவித வேதசாஸ்திரப் பட்டங்களையும் பெற்றிருந்தான். அவனை மெருகேற்ற வேறொன்று அவனுக்கு அவசியமில்லாதிருந்தது. ஆனால் அவையனைத்தையும் நான் அவனிடமிருந்து அகற்ற வேண்டியதாயிருந்தது” என்றார். 64அது தான் வியஷம். அவனுக்குள் அதிகம் புகுத்துவதல்ல, அவனிடமிருந்து எடுத்துப் போடுவது. இன்றைய குருவானவர்களிடம் காணப்படும் காரியம் அதுதான். அவர்களிடமிருந்து தேவன் எடுத்துப் போட்டு, அவர்களுக்குள் பரிசுத்த ஆவியை வைக்கவேண்டும். எடுத்துப் போடுதல் அவன் சொன்னான்... ''ஆண்டவரே, அவன் மிகவும் பொல்லாதவன்'' என்றான், அன்னியா. கர்த்தரோ, ''அவன் இப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறான். இந்த தெரு வழியாகச் சென்றால், ஒரு நீரூற்றைக் காண்பாய். அதை கடந்து சென்றால், இடது பாகத்தில் ஒரு வெள்ளை வீட்டைக் காண்பாய். அங்கு சென்று கதவைத் தட்டு. அவன் அங்கு முற்றத்தில் படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் மேல் கைகளை வை. அவனை தமஸ்கு நதிக்குக் கொண்டு சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடு, அவன் எனக்காக அதிகமாய்ப் பாடுபட வேண்டும். ஏனெனில் அவன் புறஜாதிகளுக்கு அனுப்பப்படவிருக்கும் தூதன்“ என்றார். ஆமென்! 65ஆண்டவரே, “சற்று பொறும். அவன் எந்த வேதாகப் பள்ளியை சேர வேண்டுமென்று நான் ஆலோசனை கூற வேண்டும்?'' என்றா அனனியா கேட்டான்? நாம் கலாத்தியர் நிருபத்தைப் படித்து அதை அறிந்து கொள்ளலாம். நாம் கலாத்தியர் முதலாம் அதிகாரத்தை எடுத்து, 10-ம் வசனத்திலிருந்து வாசித்து, பவுல் எந்த வேதாகமப் பள்ளிக்குச் சென்றான் என்றும், யாருடைய கைகள் அவன் மேல் வைக்கப்பட்டதென்றும், அப்பொழுது என்ன நேர்ந்ததென்றும் அறிந்து கொள்ளலாம். கலாத்தியர் நிருபம் முதலாம் அதிகாரம். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமலிருக்க நாம் அவனுடைய இரட்சிப்பிலிருந்து தொடங்குவோம். 10-ம் வசனம். இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்றும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. ஓ, என்னே, என்னே, என்னே! இங்கு நான் ஒன்றைக் கூறட்டுமா? கலாத்தியர் முதலாம் அதிகாரம் 8-ம் வசனத்தைப் பாருங்கள். ஜனங்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளச் செய்தவன் பவுல் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்போஸ்தலர் 19. அவன் நிச்சயம் அப்படிச் செய்தான். இப்பொழுது நாம் 8-ம் வசனத்தை வாசிப்போம். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். புரிகிறதா? இந்த பவுலின் சுவிசேஷத்தை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 9-ம் வசனம்: முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொ சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். அது பிரதான தூதனாயிருந்தாலும் சரி, அல்லது பேராயர், பொதுவான மேற்பார்வையாளர், டாக்டர் இன்னார் இன்னார், அது யாராயிருந்தாலும் சரி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்தும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்தும், வரங்கள் புதுபிக்கப்படுதலைக் குறித்தும், கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும் ஒருவன் பிரசங்கம் செய்யாவிட்டல் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன், அவன் இதிலுள்ள ஏதாவதொரு வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதுவே வேறொரு காலத்துக்குரியது என்று வேதாகமப் பள்ளியில் அவன் கற்ற ஒரு கருத்தை ஆதாரமாகக் கொண்டு கூற முற்பட்டால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். 66நாம் தொடர்ந்து படிக்கலாம். பவுல் அதை எப்படி பெற்றுக் கொண்டான் என்று பார்ப்போம். இன்று காலை உங்களிடம் நான் என்ன கூற முயல்கிறேன் என்று நீங்கள் காணலாம். இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. நான் வேறெதை எதிர்பார்க்க முடியும்? தேவனிடத்தில் அன்பு கூறும் ஒரு மனிதன். அதுவும் முக்கியமாக ஒரு போதகன். மனிதரால் வெறுக்கப்படுவதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்? மனிதர்கள் உன்னை வெறுப்பார்கள். இயேசு அவர்கள் என்னை வீட்டெஜமான் என்று அழைத்தால்... நான் எஜமான். நான் உங்களெல்லாரிலும் பெரியவன். உங்களெல்லாரைக் காட்டிலும் நான் பரிசுத்த ஆவியினால் அநேக அற்புதங்களைச் செய்ய முடியும்? ஏனெனில் எனக்குள் பரிசுத்த ஆவியின் பரிபூரணம் வாசம் செய்கிறது. அப்படியிருக்க, அவர்கள் என்னை 'பெயல்செபூல்' என்று அழைப்பார்களானால், உங்களை அவர்கள் இன்னும் எவ்வளவு அதிகமாக அழைப்பார்கள்? என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். பேசுகிறவர்கள் நீங்களல்ல, உங்கள் பிதாவே உங்களுக்குள்ளிருந்து பேசுபவர். நீங்கள் வார்த்தையில் மாத்திரம் சரியாக நில்லுங்கள்,'' என்றார். அவர் வேதாகமத்தை எழுதி முடித்தவுடன், இதனுடன் எவனாகிலும் ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும்'' என்றார். தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்க தேவன் உதவி புரிவாராக! 67அடுத்த வசனம், இதை வேகமாக படிக்கலாம். மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின் படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (''நான் மெதோடிஸ்டுமல்ல, பாப்டிஸ்டுமல்ல, பிரஸ்பிடேரியனுமல்ல, பெந்தெகொஸ்தேயினனும் அல்ல). அது மனிதருடைய யோசனையின்படியல்ல. ''நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை...“ ''அதை நான் ஒரு மனிதனிடமிருந்தும் பெறவில்லை; எந்த வேதாகமப் பள்ளியிலிருந்தும், வேத பாண்டித்தியம் பெற்ற எவரிடத்திலிருந்தும், எந்த பள்ளிக் கூடத்திலிருந்தும், அதை நான் கற்கவில்லை. அம்முறையில் அதை நான் போதிக்கவில்லை, அம்முறையில் அதை நான் கண்டு கொள்ளவில்லை. அம்முறையில் அது என்னிடம் வரவுமில்லை. பவுலே, அப்படியானால் அது எப்படி வந்தது? ...இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்து தம்மை தேவனுடைய குமாரனாக எனக்கு வெளிப்படுத்தின போது, அன்று அக்கினி ஸ்தம்பம் என்னைத் தாக்கின போது, நான், ''ஆண்டவரே, நீர் யார்?“ என்றேன், அவர், ''நான் இயேசு'' என்றார். 68அவனுக்கு என்ன நேர்ந்ததென்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். ஒரு மனிதன் அனுபவம் பெற, அவன் பத்தாண்டு கிரேக்க மொழி படிக்க வேண்டுமென்றும் அதற்கடுத்த பத்தாண்டு வேறெதாவது படிக்க வேண்டுமென்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்குள் அவனுடைய காலம் கடந்துவிடுகிறது. கவனியுங்கள்! ...நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். நான் யூத மார்க்கத்திலிருந்த போது என்னுடைய நடத்தையைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்... நான் டாக்டர் பட்டம் பெற்ற பெரிய மேதையாயிருந்தேன். அந்த நாட்டிலே தலைசிறந்து விளங்கிய கமாலியேல் என்னும் ஆசிரியரிடம் அவன் கல்வி பயின்றவன். கமாலியேல் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவர் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், ஐயா, ''என் யூத மார்க்கத்தைக் குறித்து நன்றாய் அறிந்திருந்தேன். அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை எப்படி உச்சரிக்க வேண்டுமென்றும், இன்னும் மற்றெல்லா காரியங்களையும் நான் நன்கு அறிந்திருந்தேன். காலை ஜெபங்களை உச்சரிக்கவும், ஜனங்களை ஆசீர்வதிக்கவும் நான் அறிந்திருந்தேன்'' பாருங்கள்?... தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி அதைப் பாழாக்கி, “அந்த உருளும் பரிசுத்தர்களை நான் தடை செய்ய முயன்றேன்'' பாருங்கள்? பாருங்கள்? என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூத மார்க்கத்திலே தேறினவனாய்... “நான் மிகவும் பெரியவனாயிருந்தேன்... நான் தேறினவனாயிருந்தேன். அவர்களெல்லாரையும் நான் அழிக்க முடியுமென்று காண்பித்தேன். நான் ஸ்தேவானைக் கொன்றேன். வேறு பல செயல்களையும் புரிந்தேன். நான் என்ன செய்தேன் என்று பாருங்கள்? தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தினேன்.'' 69என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். அவன் தேவனுடைய வார்த்தைக்காக அல்ல, “பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தான். வேறு விதமாகக் கூறினால், நான் முற்றிலும் ஒரு மெதோடிஸ்டு, நான் முற்றிலும் ஒரு பாப்டிஸ்டு, நான் முற்றிலும் ஒரு பெந்தெகொஸ்தேயினன்”. ஓ, நீ அப்படியிருக்கிறாயா? நான் முற்றிலும் தேவனுடையவனாயிருக்க விரும்புகிறேன். ஆம், அது தான். பாருங்கள்? சரி. அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை... எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது... (ஓ, ஓ, பவுல் நீ இங்கு வந்துவிட்டாய்) அது எப்படி முடியும்? “எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல் அவர் என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய குமாரனை எனக்குள் வெளிப்படுத்த பிரியங்கொண்டார். அது தான். ஆவியின் வடிவில் எனக்குள் பரிசுத்த ஆவியாக இருந்து கொண்டு, அவரை எனக்குள் வெளிபடுத்துபவர்'', ஓ, என்னே! வ்யூ! எனக்கு சத்தமிட வேண்டும் போல் தோன்றுகிறது. 70கவனியுங்கள். சகோதரனே, இதை கூற விரும்புகிறேன். தேவனுக்குப் பிரியமாயிருந்த போது! ஓ, அல்லேலூயா! தேவனுக்குப் பிரியமாயிருந்தபோது ஒரு குடிகார தகப்பன், தாய்... (என் தாயே, தேவன் உங்களைஆசீர்வதிப்பாராக! உங்களுக்கு விரோதமாக நான் எதையும் கூறவில்லை). ஒரு முயலுக்கு எப்படி பனிக்கட்டி காலணி (snow shoes) தெரியாதோ, அது போன்று என் தாயும் தேவனை அறியாமலிருந்தார்கள். என் தந்தை குடித்துவிட்டு, போதை மிகுதியால் வீதிகளில் விழுந்துகிடப்பார். பள்ளிக் கூடம் போவதற்கு எனக்குக் காலணிகள் கூட இல்லை. என் தலைமயிர் நீண்டு வளர்ந்து, கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்தது. இந்தியானாவிலுள்ள கென்டக்கியை நான் சேர்ந்தவன் என்பதற்காக எல்லோரும் என்னை வெறுத்தனர். ஓ, அது துர்நாற்றமுள்ள காட்சியாக இருந்தது. ஆயினும் என்னைத் தெரிந்து கொள்வது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. ஆமென்! என் தாயின் வயிற்றிலிருந்தது முதல் அவர் என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய குமாரனை எனக்குள் வெளிப்படுத்தி, என்னை தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிற்கும் ஊழியக்காரனாகச் செய்து, எனக்கு தரிசனங்களைக் காண்பித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் என் மூலம் நடப்பித்தார். ஓ, என்னே! 71அவன் எதைக் குறித்து பேசுகிறான் என்று பார்த்தீர்களா? அப்படி செய்வது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. எப்படி? கூர்ந்து கவனியுங்கள். 1-ம் வசனத்தைப் பாருங்கள். தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும். ''நான் எந்த பேராயரிடத்திலும் சென்று, என்ன செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்கவில்லை. நான் இரத்தமும் மாம்சமும் கொண்ட எவரிடத்திலும் செல்லவில்லை. எந்த ஸ்தாபனத்திடமும் செல்லவில்லை. அவர்களிடம் நான் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. நான் மாம்சத்தோடும். இரத்தத்தோடும் யோசனை பண்ணவில்லை. நான் எருசலேமிலுள்ள பிதாக்களிடத்திலோ சென்று, “எனக்குத் தரிசனம் கிடைத்தது. நான் என்ன செய்ய வேண்டும்? நான் கர்த்தராகிய இயேசுவை என் தரிசனத்தில் கண்டேன்” என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அவர்கள், “உருளும் பரிசுத்தனே, இங்கிருந்து வெளியே போ. உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கூறியிருப்பார்கள். “நான் தொடக்கத்திலே அவர்களுடைய எல்லா பட்டங்களையும் பெற்றிருந்தேன்.'' 72பவுல் தான் கற்றவையனைத்தும் மறந்து, கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ண வேண்டியதாயிருந்தது என்று உரைக்கும் வசனத்தை உங்களுக்கு காண்பிக்க முடியும். ஓ! எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபி தேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். நாம் இவ்வாறு படித்துக் கொண்டேபோனால், அவனும் பேதுரு அப்போஸ்தலனாகிய அதுவரை ஒருவரையொருவர் சந்தித்ததில்லை, ஒருவரையொருவர் அறியவில்லை என்று காணலாம். ஆனால் அவர்கள் சந்தித்தபோது, இருவரும் ஒரே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்ததாக அறிந்து கொண்டனர். தேவன் ஒரு பள்ளியை நிறுவியுள்ளார். ஆம். 73பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு அங்கு நின்றுகொண்டு, ''நீங்கள் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்,'' என்றான். பிலிப்பு, “ஓ, அது எவ்வளவு மகிமையானது! நானும் ஏதாவதொன்றை செய்ய வேண்டும்... எனக்கு சமாரியாவிலிருந்து அழைப்பு வந்துள்ளது'' என்று கூறி, அங்கு சென்று தெருவில் சாட்சி கூறினான். முதலாவதாக வியாதியஸ்தன் ஒருவன் அங்கு வருகிறான். வியாதியஸ்தன் மேல் பிலிப்பு கைகளை வைத்தவுடன், அவன் சுகமடைந்து, 'தேவனுக்கு மகிமை' என்று ஆர்ப்பரித்து குதிக்கத் தொடங்கினான். அதன் விளைவாக பெரிய கூட்டம் ஒன்றை அவன் அங்கு நடத்த வேண்டியதாயிற்று. அவன், ”உங்களுக்கு பரிசுத்த ஆவி தேவை என்றான். மேலும் அவன், நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறி அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தான். அவன் பேதுருவிடம் ''பேதுருவே, இப்பொழுது அவர்கள் மேல் கைகளை வையும்'' என்றான். பேதுரு கைகளை வைத்த மாத்திரத்தில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். கொர்நேலியுவின் வீட்டில் பேதுருவும் அதே முறையைக் கையாண்டான். 74பவுல் அதற்கு முன்பு பேதுருவைப் பார்த்ததுமில்லை. அவனைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட்டதுமில்லை, ஆனால் அவன் எபேசுவின் கரை வழியாய் கடந்து வந்தபோது சில சீஷர்களைக் கண்டான். அங்கு அப்பொல்லோ என்னும் பெயருள்ள ஒரு பாப்டிஸ்டு போதகரையும் கண்டான். அப்பொல்லோ இரட்சிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞர். அவன் மிகவும் புத்தி கூர்மையுள்ளவன். அவன் பழைய ஏற்பாட்டைக் கொண்டு, இயேசுவே தேவனுடைய குமாரன் என்று நிரூபித்து வந்தான். ஆம், ஐயா. அவன் மிகவும் புத்திசாலி. அவர்கள் எல்லோரும் களிகூர்ந்து ஆர்பரித்துக் கொண்டிருந்தனர். அப்படித்தான் வேதாகமம் கூறுகின்றது. நீங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 18, 19 அதிகாரங்களைப் படித்து பார்த்து, அது உண்மையா அல்லவா என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் மகிழ்ச்சி மிகுதியால் ஆவியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். பவுல் அவர்களைப் பார்த்து ''நீங்கள் விசுவாசிகளானபோது (ஆங்கிலத்தில், “since ye believed,” அதாவது, “விசுவாசிகளான பிறகு” என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். 75மூல கிரேக்க மொழியில், நீங்கள் விசுவாசிகளானபோது (when you believed) பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று எழுதப்பட்டுள்ளது என்று கூறி, அக்கருத்தை ஜனங்களின் தொண்டையில் திணிக்க முயலும் பாப்டிஸ்டு சகோதரர்களாகிய உங்களுக்கு கிரேக்க வேதாகமத்தை என்னிடம் காண்பிக்கும்படி சவால் விடுகிறேன். என்னிடம் அராமிய மொழி வேதாகமும், எபிரெய மொழி வேதாகமும் கூட உள்ளன. அவை ஒவ்வொன்றும், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?“ என்றுதான் உரைக்கின்றன. நீங்கள் விசுவாசித்தினால் இரட்சிக்கப்படுகின்றீர்கள். அது நீங்கள் தேவனிடம் கொண்டுள்ள விசுவாசமாகும். இரத்தம் பாவத்தினின்று உங்களை சுத்திகரிக்கின்றது. ஏனெனில் அந்த பலி செலுத்தப்பட்டுள்ளது. இரத்தம் உங்களை சுத்தமாக வைக்கிறது. நீங்கள் இரட்சிக்கப்பட்டதாக எப்படி கூறுகின்றீர்கள்? விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அதுவும் தேவன் தமது முன்னறிவின்படி உங்களை அழைத்ததன் நிமித்தம் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இரத்தம் பாவநிவர்த்தி செய்து உங்களை எப்பொழுதும் சுத்தமாக வைக்கிறது. பின்பு நீங்கள் ஒரே ஆவியினால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, விசுவாசிகளுடன் ஐக்கியங் கொண்டு, பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் பங்கு கொண்டு, ஆவியினால் நடத்தப்பட்டு, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கின்றீர்கள். 76சற்று பொறுங்கள், நான் ஒன்றை அணுகுவதற்காக காத்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் நாம் அதற்கு வந்துவிடலாமென்று நினைக்கிறேன். நேரமாகிவிட்டால் என்னை ஞாபகப்படுத்தும்படி உங்களிடம் கூறினேன் அல்லவா? இன்னும் ஒரு சில வார்த்தைகள். இன்னும் கொஞ்சம். 77இந்த இரட்சிப்பு எவ்வளவு காலம் நீடிக்கின்றது? இது எப்படிப்பட்ட இரட்சிப்பு? ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்குச் செல்லவா? இப்பொழுது நாம் ஒரு நிமிடம் எபி. 9:11-க்கு வேதாகமத்தை திருப்பி, இந்த இரட்சிப்பு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்று பார்க்கலாம். அது எத்தகைய இரட்சிப்பு? இப்பொழுது நாம் எபி. 9:11-ஐ படிக்கலாம். கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல... (அதே போதகர் பவுல்தான் இதை கூறுகிறான்)... பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும் வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலே பிரவேசித்து (ஒரு வாரத்திற்கு இரட்சிப்பு. அல்லது அடுத்த எழுப்புதல் வரைக்குமா? எது வரைக்கும்?) நித்திய மீட்பை உண்டு பண்ணினார். 78நித்தியம் என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன? கிறிஸ்துவுக்குள் நான் விசுவாசித்த பிறகு... பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கிறிஸ்துவென்று ஒருவனும் சொல்லமுடியாது. எனவே மூவகை ஜனங்கள் உள்ளனர். அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள், விசுவாசிகள். நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிப்பவர்கள் வெளிப்பிரகாரத்தில் (count) நுழைகின்றவர்களாயிருக்கின்றனர். ஆசரிப்பு கூடாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்கள் முதலில் என்ன செய்தனர்? வெளிப்பிரகாரத்தில் நுழைந்தனர் - அதாவது புறஜாதிகள். அடுத்ததாக வெண்கல பலிபீடம். பொற்கிண்ணத்தில் (golden laver) அவர்கள் பலியைக் கழுவினர். அடுத்ததாக பலியானது கொல்லப்பட்டு அதன் இரத்தம் பலிபீடத்தின் மேல் தெளிக்கப்படுதல். பின்பு வருடத்திற்கு ஒருமுறை ஆரோன் சாரோனின் ரோஜாவின் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் - அது விலையுயர்ந்த தைலம். அது சுகந்த வாசனை கொண்டது. அதை அவன் சிரசின் மேல் ஊற்றினர். அது அவன் அங்கியின் ஓரம் வரைக்கும் வடிந்தோடியது. வருடத்திற்கு ஒரு முறை அவன் எவ்வாறு திரைக்குப் பின்னால் செல்கிறான் என்பதைக் கவனியுங்கள். அவன் இரத்தத்தை கிருபாசனத்துக்கு கொண்டு செல்கிறான். ஒரு சமயம் அவன் தன் கோலைக் கொண்டு சென்று அதை மறந்தே போய்விட்டான். அதைத் தேடி அவர்கள் சென்ற போது, அது துளிர்த்து பூப் பூத்திருந்தது. நாற்பது ஆண்டுகளாக ஒருக்கால் அவன் வனாந்தரத்தில் உபயோகித்த அந்த பழைய கோல் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது! கவனியுங்கள், அவன் உடன்படிக்கையின் இரத்தத்தைக் கொண்டு சென்றபோது அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தான். அவனுடைய அங்கியின் ஓரத்தில் ஓசையிடும் மணிகளும் மாதுளம் பழங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. அவன் நடக்கும்போது காலை அசைக்கும் ஒவ்வொரு முறையும், 'தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று அவர்கள் உச்சரித்தனர். ஓ, என்னே! 79நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்? பிரான்ஹாம் கூடாரமே கவனித்துக் கொள்! உனக்கு தருணம் அளிக்கப்பட்டுவிட்டது. ஒருவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய குடும்பத்தில் சுவிகாரப் புத்திரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிதாவினால் அவனுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு தேவன் அவனை எதற்கென்று அழைத்தாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற அப்பணியில் அவனை நியமிக்கும் போது, அவனுடைய நடத்தை , ''கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“ என்பதாய் இருக்க வேண்டும். ''அதனின்று நீ விலகி வரவேண்டும்.'' ''கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.'' ''மூப்பர்கள் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும்.'' “தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'', தேவனுடைய வார்த்தையே உங்களில் முதன்மை ஸ்தானம் வகிப்பதாக! அது உங்கள் இருதயங்களில் பதிவதாக! தேவனுடைய வார்த்தையில் நீங்கள் நடக்க வேண்டும். ”கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.'' ''நீங்கள் மாத்திரம் இங்கு வருவீர்களானால், நாம் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுவேன். நாம் நம்மை ஸ்தாபித்துக் கொண்டு, உங்களை ஸ்தாபனத்தின் அங்கத்தினராக்கிவிடுவோம். அப்பொழுது நீங்கள் பெரிய மனிதராகிவிடுவீர்கள்''. பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தரே பரிசுத்தர். பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தரே பரிசுத்தர், என்று கடந்து போய் கொண்டிருங்கள். யார் என்ன சென்னாலும், அது உங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டுப் பண்ணாது. ''அந்த ஒலிநாடாக்களை போடாதீர்கள். இதை அதை செய்யுங்கள், மற்றதை செய்யுங்கள்.'' “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்லுங்கள். உங்கள் கண்களை நீங்கள் கல்வாரி மீது வைத்துவிட்டீர்கள். ஒன்றும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் விலையேறப்பெற்ற அபிஷேகத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, ராஜாவின் பெரும் பாதையில் நடந்து சென்று, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். வ்யூ! ஆமென். சரி. 80இதை எந்த மனிதனிடத்திலிருந்தும் பெறவில்லையென்று பவுல் கூறுகிறான். நம்முடைய பாடமாகிய கலாத்தியரில் அவன் என்ன கூறுகிறான்? தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். அவருடைய சித்தம். குறிப்பு எழுதி கொள்பவர்களுக்கு - அது நம் வசனம். நான் துரிதமாக முடிக்கப் போகிறேன். ஏனெனில் நேரம் கடந்து விட்டது. ஓ, ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பொற்கட்டி. அதை கையிலெடுத்து மெருகேற்றிக் கொண்டே போகலாம். நீங்கள் தோண்டிக் கொண்டே செல்லலாம்... அதிலிருந்து ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்து, அதை ஆதியாகமத்திற்கு கொண்டு போய் மெருகேற்றி, அதை யாத்திராகமத்துக்கு கொண்டு சென்று மறுபடியும் லேவியராகமத்திற்கு கொண்டு சென்று மெருகேற்றி, இப்படியாக மெருகேற்றி, வெளிப்படுத்தின விசேஷத்தை நாம் அடையும்போது, அது எல்லாம் இயேசுவாக இருக்கும்! ஆமென். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதை மெருகேற்றலாம். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தை அடையும் போது அது இயேசுவாகவே இருக்கும். அவர், “நான் இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர். நான் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறேன். நான் காலை விடிவெள்ளி, நான் அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறேன் என்றார். அல்பா, ஓமெகா என்பவை கிரேக்க மொழியில் முதலெழுத்தும் கடைசி எழுத்துமாம். ''நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் இருக்கிறவராகவே இருக்கிறேன். நான் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறேன்”. அது உண்மை. ''மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்'', ஓ, என்னே!நீங்கள் இங்கு கண்டெடுத்த பொற்கட்டியை மெருகேற்றிக் கொண்டே போனால், அது இயேசுவில் முடிவடையும். 81இன்னும் சிறிது நேரம், பின்பு நாம் நிறுத்திவிடலாம். ஆம். நாம் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்? இக்கூட்டத்திற்கு நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? நீங்கள் வந்துள்ள நோக்கமென்ன? இவ்வுலகம் எதற்காக தவித்துக் கொண்டிருக்கிறது? அணுகுண்டு எதற்காக தொங்கிக் கொண்டிருக்கிறது? - இந்த மூலக் கூறுகளும் அணுக்களும்? இவையெல்லாம் எதை குறிக்கின்றன? இப்பொழுது ஒரு நிமிடம் ரோமர். 8-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். இது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது?இவையனைத்தும் எதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன? ரோமர். 8-ம் அதிகாரம். அதை இனிமையாக்க நாம் 19-ம் வசனத்திலிருந்து படிக்கத் தொடங்குவோம். சரி. ரோமர். 8-ம்அதிகாரம். அதற்கு நான் திரும்பிவிட்டேன். ஆம், ஐயா. 8-ம் அதிகாரம். 18-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். 14-ம் வசனத்திலிருந்தே தொடங்குவோம். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல்... 82“ஓ, என்னால் நிற்க முடியுமா என்று தெரியவில்லையே. ஊ, ஊ, ஊ, நான் மாத்திரம் உறுதியாக நின்றால்” நானாக நிற்பது ஒன்றுமில்லை. அவர் என்னைப் பிடித்து நிறுத்தி நான் அவருக்குள் இருப்பதே முக்கியம். நீங்கள் “நான் அவருக்குள் இருந்தால் என்று கேட்கலாம். பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள், எங்களுக்கு அதில் எப்பொழுதும் விசுவாசம் உண்டு என்கின்றீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கை நீங்கள் அவருக்குள் இல்லை என்பதை நிரூபிக்கிறது. அவர் பிரசங்கித்த அந்த சுவிசேஷத்தை நீ விசுவாசியாமல் போனால், நீ அவருக்குள் இல்லை என்பது ருசுவாகிறது. பாப்டிஸ்டுகள், நிச்சயமாக நாங்கள் நித்திய பாதுகாப்பு (Eternal security) என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்கின்றனர். ஆனால் அவர்கள் சுருட்டு புகைத்து, நடனங்களில் பங்கு கொள்கின்றனர். பெண்கள் தலைமயிரை கத்தரித்து, முகத்தில் வர்ணம் தீட்டி நடக்கின்றனர். அதை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்று உங்கள் கனிகள் நிரூபிக்கின்றன. ''தெய்வீக சுகமளித்தலில் உங்களுக்கு நம்பிக்கையுண்ட ?'', என்று நான் கேட்டால், ''ஓ, அது முன்காலத்திலிருந்த ஒன்று என்று டாக்டர் ஜோன்ஸ் கூறுகின்றார்'' என்று பதில் வருகின்றது. நல்லது, மாய்மாலக்காரனே! உனக்கு என்ன நேர்ந்தது? வஞ்சிக்கப்பட்ட பிள்ளையே, நீ சுவிசேஷத்தை விட்டு வெகுதூரம் அகன்று சென்றுவிட்டாய். அது மிகவும் பரிதாபம். நீ சேறு நிறைந்த பாதைக்கு, எரிந்து கொண்டிருக்கும் குவியலுக்கு வழி திருப்பப்பட்டிருக்கிறாய். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இயேசு கிறிஸ்து இப்பொழுது மாம்சத்தில் தோன்றவில்லை என்று அறிக்கை பண்ணும் ஒவ்வொரு ஆவியும் தவறான ஆவியாகும். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயாயிருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. அவர் அன்று என்ன சொன்னாரோ, அப்படியே இன்றும் இருக்கிறார். அவர் என்றும் அவ்வாறே இருக்கிறார். கவனியுங்கள்: 83அந்தபடி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடப் பண்ணுகிற (சபையோர் 'புத்திர சுவிகாரத்தின்' என்று கூறுகின்றனர்.) ஆவியை பெற்றீர்கள். நீங்கள் சுவிகாரப் புத்திரரான பிறகு, உங்கள் ஸ்தானத்தில் வைக்கப்படுகின்றீர்கள். வைபவம் முடிவடைந்தவுடன், நீங்கள் அந்த சரீரத்தில் சரியான இடத்தில் வைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, குமாரரும் குமாரத்திகளுமாகிவிடுகின்றீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஸ்தானத்தில் பொருத்தப்படுகின்றீர்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். அது எப்படி செய்கிறது? நீங்கள், ''தேவனுடைய மகிமை! அல்லேலூயா! நான் தேவனுடைய பிள்ளை“ என்று சொல்லிக் கொண்டே, நீங்கள் செய்யும் காரியங்களில் ஈடுபட்டால்! தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய கிரியைகளை மாத்திரமே செய்வார். ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற காரியங்களைத் தானும் செய்வான்'' என்று இயேசு கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 84இந்த திராட்சை செடி வளர்ந்து ஒரு கொத்து திராட்சை பழங்களைக் கொடுத்து, அதில் வேறொரு கிளை வளர்ந்து, அந்த கிளையில் பூசனிக்காய் தோன்றுமானால், ஏதோ தவறுள்ளது, பாருங்கள்! அது ஒட்டுப் போடப்பட்ட சபை, ஒட்டு போடப்பட்ட திராட்சை செடி, ஒட்டுப் போடப்பட்ட ஒரு மனிதன். ஒருவன் ஒரு ஸ்தாபனத்தை சார்ந்திருந்து, அதே சமயத்தில் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு அவனுக்கு பரிசுத்த ஆவியும், தேவனுடைய வல்லமையும் மற்றெல்லாமும் இல்லாமல் போனால்... 85நீங்கள் அந்நிய பாஷை பேசி குடிபோதையிலுள்ளவர்கள் போல் நடந்து கொள்ளலாம். பிசாசுகள் அந்நிய பாஷை பேசுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம், ஐயா, அவை ஆவியில் நடனமாடி, கூச்சலிட்டு, வாயில் நுரைதள்ளுவதை நான் கண்டிருக்கிறேன். அதைக் குறித்து இப்பொழுது நான் பேசவில்லை. நான் தேவனுடைய ஆவியைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடன் கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடன் நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள்.... இதை சற்று கேளுங்கள். ஓ, அது மிகவும் அழகானதல்லவா? ஆதலால் இக்காலத்து பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுவதற்கு சிருஷ்டியானது... வேதாகமத்தின் நடுவில் கிரேக்க மொழியில் 'சிருஷ்டியானது' என்று எழுதப்பட்டுள்ளது. ...மிகுந்த ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. 86எல்லாம் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது! முழு சிருஷ்டியும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது? தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுவதற்கு. சபையானது அதன் ஸ்தானத்தில் பொருத்தப்பட அது காத்துக் கொண்டிருக்கிறது. ஆதாம் தேவனுடைய புத்திரனாயிருந்தபோது, அவனுடைய ஆதிக்கம் எங்கிருந்தது? பூமியில். பூமியை அவன் ஆதிக்கம் கொண்டிருந்தான். அது சரியா? அவர் அப்பொழுது ஏல், ஏலா, ஏலோகிம் ஆக இல்லை. அவர் யேகோவாவாகயிருந்தார். பாருங்கள்? அதாவது, “நான் தேவன். என்னை விட தாழ்வானவர்களை நான் படைத்து என் கீழ் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் ஆதிக்கத்தை அளித்துள்ளேன். பூமி அவர்கள் ஆதிக்கத்தின் கீழுள்ளது”. மனிதன் பூமியின் மேல் ஆதிக்கம் கொண்டிருந்தான். முழு சிருஷ்டியுமே இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியான ஆயிரம் வருட நாள் வரக் காத்திருக்கிறோம். அப்பொழுது நமது ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டவர் வந்து காத்திருக்கும் தம் மணவாட்டியைக் கொண்டு செல்வார். அந்த இனிமையான விடுதலைக்காக பூமி தவித்து அழுது கொண்டிருக்கிறது. அப்பொழுது நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வருவார். 87அது சரியா? காத்துக் கொண்டிருக்கிறது. தேவன் தமது சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்தி அவர் வெளிப்பட்டு, “ஒரு நபர் மூலம் கிரியை செய்ய முயன்று கொண்டிருக்கிறார். இதோ என் ஆவி தடையின்றி அவனுக்குள் ஓடுகின்றது. ஆகையால் அவன் மூலம் நான் கிரியை செய்ய முடியும்'' என்கிறார். பின்பு வேறொருவரை கொண்டு வந்து, அவனுடைய ஸ்தானத்தில் அவனை வைத்து, ”என்னால் அவனை பொருத்த முடிகிறது'' என்கிறார். புத்திர சுவிகாரம், பொருத்துதல், வெளிப்படுத்துதல்; அவனை தெரிந்தெடுத்து அவனுக்கு ஒரு வைபவத்தை நடத்தி, ஒரு தேவ தூதனை அனுப்பி அவனைச் சந்திக்கச் செய்து அவனுக்கு ஒன்றை போதித்து, அவன் உண்மையைக் கூறும் போது அவன் ஏதோ ஒன்றை ஜோடித்து கூறினால், அது பலன் தராது. இல்லை, இல்லை, அது கிரியை செய்யாது. அப்படிப்பட்ட அநேக காரியங்களை நாம் கண்கூடாக கண்டோம். ஆனால் நான் இப்பொழுது கூறிக் கொண்டிருப்பது தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுதலாகும். தேவன் தம்மை ஒருவன் மூலம் வெளிப்படுத்தி அவனை அனுப்புகிறார். அவன் புறப்பட்டு செல்கிறான். அவன் கூறும் அனைத்தும் சத்தியம். அவன் செயல்கள் அனைத்தும் சத்தியம். அவனுடைய செயல்களின் மூலம் அவன் கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றான். அவனை எப்படி நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள்? அவன் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிலை நிற்பதன் மூலம். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையில் அவர்கள் உறுதியாய் நிலை நிற்பதன் மூலமே நீங்கள் “எல்லா மனிதரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவர்கள் தேவனுடைய வசனத்தின்படி நிற்காவிட்டால், அவர்களுக்குள் ஜீவன் இல்லை'' என்று வேதம் உரைக்கின்றது. பாருங்கள்? அவர்களை தனியே விட்டுவிடுங்கள். 88இப்பொழுது தொடர்ந்து படிப்போம். நாம் நிறுத்த வேண்டும். ஏனெனில் நேரமாகிக் கொண்டே போகின்றது. சரி 9-ம் வசனம். (எபே: 1:9; தமிழில் 10 வசனம்) தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். அவர் உலகத்தோற்றத்துக்கு முன்பே தமக்குள்ளே தீர்மானித்திருந்தார். எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? பாருங்கள்? காலங்கள் நிறைவேறும் போது... ஓ, நாம் மறுபடியும் அதற்கு வந்து விட்டோம். பாருங்கள்? அதை நாம் கடந்து செல்வோம். 89எத்தனை பேர் காலங்களில் (dispensations) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்? ''காலங்கள் நிறைவேறும் போது'' என்று வேதம் கூறுகின்றது. ''காலங்கள் நிறைவேறுதல் (dispensation of the fullness of time) என்றால் என்ன? மோசேயின் நியாயப்பிரமாண காலம் ஒன்றிருந்தது, யோவான் ஸ்நானனின் காலம் ஒன்றிருந்தது. கிறிஸ்துவின் காலம் ஒன்றிருந்தது. சபை ஸ்தாபனங்களின் காலம் ஒன்றிருந்தது. பரிசுத்த ஆவி ஊற்றப்படுதலின் காலம் ஒன்றிருந்தது. இப்பொழுது புத்திர சுவிகாரத்தின் காலம். அதற்காக தான் உலகம் தவிப்புடன் காத்திருக்கிறது. ''காலங்கள் நிறைவேறும் போது'' காலங்கள் நிறைவேறுதல் என்றால் என்ன? மரித்தோர் உயிரோடெழுந்து, வியாதி அறவே அகன்று, பூமி தவிப்பதை நிறுத்திவிடும் காலம் தான் “காலங்கள் நிறைவேறுதல்”, இதை கவனியுங்கள்: காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின் படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று... அதற்காக நீங்கள் மகிழ்ச்சி கொண்டவர்களாயிருக்கிறீர்கள் அல்லவா? அவர் அதை எப்படி செய்யப் போகின்றார்?யாருக்குள் அவர் சகலவற்றையும் கூட்டப் போகிறார்? (சபையோர், கிறிஸ்துவுக்குள் என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). நாம் எப்படி கிறிஸ்துவுக்குள்ளாக பிரவேசிக்க முடியும்?ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அது யாருடைய சரீரம்? (“கிறிஸ்துவினுடையது'') அது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டது (”ஆமென்'') அவர் நமது ஆக்கினையை ஏற்றுக் கொண்டார். அப்படியானால் நாம் யார்? “நான் இரத்தத்தை பார்க்கும் போது, உங்களைக் கடந்து செல்வேன்'' அவர் ஒவ்வொரு முறையும் அந்த சரீரத்தைப் பார்க்கும்போது, அது இரத்தம் தோய்ந்ததாய் அங்குள்ளது. நான் எப்படி அதற்குள்ளானேன்? பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் கடந்து செல்கிறார். ஓ, என்னே! காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று. 90இப்பொழுது ஒரு நாமத்தைக் குறித்து நீங்கள் பேச விரும்பினால்; சற்று நேரம் அதைக் குறித்து பேசுவோம். பரலோகத்திலுள்ள குடும்பம் அனைத்தும் என்னவென்று பெயரிடப்பட்டுள்ளது? (சபையோர், 'இயேசு கிறிஸ்து' என்கின்றனர் - ஆசி.) பூமியிலுள்ள குடும்பம் அனைத்தும் என்னவென்று பெயரிடப்பட்டுள்ளது? ('இயேசு கிறிஸ்து'). இங்கு அநேக அருமையான பெண்கள் உள்ளனர் - மிகவும் அருமையானவர்கள். ஆனால் ஒரே ஒரு திருமதி பிரான்ஹாம் மாத்திரமே இருக்கின்றாள் - திருமதி வில்லியம் பிரான்ஹாம், அவள் என் மனைவி. அவள் என்னுடன் வீட்டிற்கு செல்கின்றாள். பாருங்கள்? மற்ற பெண்கள் அவரவர் கணவர்களுடன் வீடு திரும்புகின்றனர். அது போன்று, ஜீவனுள்ள தேவனின் ஜீவிக்கும் மகத்தான சபை ஒன்று மாத்திரமேயுண்டு. அவன் அவருடைய நாமத்தை தரித்திருக்கின்றான். அவன் அவருடைய ஆவியினால் நிறைந்திருக்கின்றான். அது உண்மை. 91நான் நற்கிரியைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மருத்துவமனைகள், மற்ற காரியங்கள் இவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அவையெல்லாம் நல்லவையே. அவர்கள் செய்யும் காரியங்களுக்கு நான் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவை எளியோர்க்கு, அவதியுறும் மானிடருக்கு ஆசீர்வாதமாய் அமைந்துள்ளன. அவர்களுடைய மகத்தான ஸ்தாபனங்களும் கோடிக் கணக்கான டாலர்களும், மூலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளைக் காட்டிலும் இவைகளைக் காணவே நான் பெரிதும் விரும்புகிறேன். அவர்களை பிரசங்க பீடத்தில் நிற்கும் போதகர்கள் என்னும் முறையில் கெளரவிக்கிறேன். ஆனால் காலங்கள் நிறைவேறும்போது, ஒன்று கூட்டப்பட வேண்டிய நேரம் வரும் தருணத்தில், தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியதாயுள்ளது. அந்த யுகத்தில் கிறிஸ்துவுக்குள் சகலத்தையும் அவர் கூட்ட வேண்டும். கிறிஸ்து என்றால் என்ன? நாம் எப்படி அவருக்குள்ளாக முடியும்? Iகொரி. 12: நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே, சரீரத்திற்குள்ளாக - அதாவது கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக - ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, ஒவ்வொரு வாரத்திலும் அவருக்கிருக்கும் நற்காரியங்கள் அனைத்திலும் நாம் பங்கு கொள்பவர்களாயிருக்கிறோம். அது சரியா? முழு உலகமே தவித்து, அழுது தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது கிறிஸ்துவும் சபையும் ஒன்றாக கூட்டபடுவார்கள். காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். ...கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி (inheritance) தெரிந்து கொள்ளப்பட்டோம். 92ஓ, சகோதரன் நெவில், இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். நான்... ''சுதந்தரம்“ என்னும் அந்த வார்த்தை. ஓ, என்னே! அது மீட்பின் உறவின் முறையானாகிய சகோதரன் என்று நானறிவேன். சகோதரனே நான் பைத்தியம் பிடித்தவனல்ல என்று நினைக்கிறேன். ஓ, என்னே! அது என்ன? சுதந்திரம் (inheritance). நாம் சுதந்தரவாளியாகிவிட்டோம். சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள யாராவது ஒருவர் ஏதாவதொன்றை நமக்காக விட்டிருக்க வேண்டும். உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் ஒன்றை உங்களுக்காகவிட்டிருந்தார். அதுதான் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள நாமம். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்படும் போது, நீங்களும் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுவீர்கள். இக்கருத்தை இன்றிரவு பேசுவதற்காக வைத்துக் கொள்ளலாம். இன்னும் சற்று தொடர்ந்து படிப்போம், என்னே, என்னே! இன்றிரவு நாம் எப்படி 3-ம் வசனத்திற்கு வசனங்கள் கூட முடிக்கவில்லையே. நாம் இப்பொழுது முடிக்கப் போகிறோம். அதற்கு முன்பாக இதை படித்து விடப் போகின்றேன். 93...கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். என்ன? இந்த சுதந்திரத்தை நாம் எப்படி பெற்றுக் கொண்டோம்? நாம் உத்தமமாக நடந்தோம் என்பதனாலா? நாம் எவ்வாறு இந்த சுதந்தரத்தைப் பெற்றுக் கொண்டோம்? நாம் முன் குறிக்கப்பட்டதனால். ஆமென், வ்யூ! என் ஆர்மீனிய சகோதரரே, அதை நீங்கள் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் என்றறிவேன். உங்களைப் புண்படுத்த வேண்டுமெனும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் நான் முன்குறிக்கப்பட்டேன் என்று அறிந்து கொள்வது எனக்கு நல்லுணர்வைத் தருகின்றது. சகோதரனே, நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள். உங்களால் அதை பார்க்க முடியவில்லை. ஆயினும் அதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். பாருங்கள்? நீங்கள் சரியே. பாருங்கள்! ஆனால் நீங்கள்..., பாருங்கள்? ஆனால் அதை காண்பது நல்லதாயிருக்கும். ஆம். சகோ. நெவில் அன்று வளைவுகள் போட்ட பாதையைக் குறித்து (arcade) கூறினது போன்று . ''உங்களுக்கு இருப்பதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், ஒரு ஏணியின் மேலேறி பார்க்க வேண்டும்'', ஆம் ஐயா. அதுதான். தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, நமக்குள்ளது என்னவென்று அறிவிக்கும் ஏணியாகும், பாருங்கள் 94பாருங்கள், சுதந்தரம், ஓ, என்னே அது எத்தகைய சுதந்தரம்? தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின் படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு... அவர் தந்தை ஆவதற்கு முன்பே, அவர் தேவனாக ஆவதற்கு முன்பே, அவர் இரட்சகராக ஆவதற்கு முன்பே, அவர் சுகமளிப்பவராக ஆவதற்கு முன்பே - இவையனைத்திற்கும் முன்பே - அவர் முன்குறித்து, ஆட்டுக்குட்டியானவரின் பெயரை புத்தகத்தில் எழுதி, தமது முன்னறிவைக் கொண்டு காலங்கள் அனைத்தையும் குனிந்து நோக்கி உங்கள் பெயரைக் கண்டு அதையும் அந்த புத்தகத்தில் எழுதினால், அது என்ன? சில காலம் கழித்து பாவமுள்ள பெற்றோர்களின் மூலம் இவ்வுலகில் நாம் பிறக்கின்றோம். நாம் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கும்போது, அந்த கோண மூக்கு யூதனாகிய பவுலைப் போன்று முதலாவதாக நாம் எல்லாவற்றையும் கிழித்தெறியத் தொடங்கினோம். ஆனால் ஏதோ ஒன்று, ''இங்கே, இங்கே, இங்கே, இங்கே!“ என்று நம்மிடம் கூறத் தொடங்கினது. நாம், “அப்பா பிதாவே”, என்றோம். அப்பொழுது நாம் வரத்தொடங்கினோம், பாருங்கள்? நம்முடைய சுதந்தரத்தைப் பெற்றுக் கொள்ளும்படி நாம் அவருக்குள் முன் குறிக்கப்பட்டோம். உலகத் தோற்றத்துக்கு முன்பே நாம் அந்த சுதந்தரத்தைப் பெற்றுக் கொண்டோம். பாருங்கள்! ஓ! தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் அவர் நடப்பிக்கிறார் - அவர் தேவனாகவும் இரட்சகராகவும் ஆக வேண்டுமென்று. அது முற்றிலும் உண்மை. 95நீங்களும் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு... யார் சத்தியம்? இயேசுவே சத்தியமாயிருக்கிறார் - சுவிசேஷமாகிய சத்தியம் எந்த சுவிசேஷம்? ஒரே ஒரு சுவிசேஷம் மாத்திரமே உண்டு. ''வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்'' என்று கலாத்தியர் முதலாம் அதிகாரம் உரைக்கின்றது. இது தான் சுவிசேஷம். உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம். வேறொரு சுவிசேஷம் இல்லை. ''நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை“. எந்த நாமத்தில் நாம் இரட்சிக்கப்படுகின்றோம்?('கர்த்தராகிய இயேசு கிறிஸ்து' என்று சபையோர் விடையளிக்கின்றனர் - ஆசி.) ஓ, என்னே! ...விசுவாசிகளானபோது (ஆங்கில வேதாகமத்தில், “after that ye believed”, அதாவது, “விசுவாசிகளான பிறகு” என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். ஓ, “விசுவாசிகளான பிறகு”, சகோதரனே, இதை நாம் எப்படி விரைவாக கடந்து செல்லமுடியும்? இன்றிரவுக்காக அதை விட்டு வைப்போம். என்ன சொல்கின்றீர்கள்? ஓ, என்னே அதை கடந்து என்னால் செல்ல முடியவில்லை. இன்றிரவுக்காக அதைவிட்டு வைப்போம். ''முத்திரை போடப்பட்டீர்கள்' என்னும் வார்த்தையை விவரிக்காமல் என்னால் விட முடியாது - நாம் எவ்வாறு முத்திரைக்குள் வருகிறோம் என்று. 96முன் குறித்தலின்படி சுதந்தரம். நான் ஒன்றை சுதந்தரமாகப் பெற்றுக் கொண்டேன். அது என்ன சுதந்தரம்? யாராகிலும் ஒருவர் ஏதாவதொன்றை எனக்கு சுதந்தரமாக விட்டுப் போயிருக்க வேண்டும், “இயேசு எனக்கு சுதந்தரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறார்'' என்று நீங்கள் கூறுகின்றீர்கள், அதை மறுபடியும் கூறுங்கள்! இயேசு எனக்கு சுதந்தரத்தை வைத்து விட்டுப் போகவில்லை. அவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்து, உங்கள் சுதந்தரத்துக்காக கிரயத்தை செலுத்தி, உங்கள், உங்களுடைய சுதந்தரத்துக்கு கொண்டு வந்தார், ஆனால் உங்கள் பெயர் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது. தேவன் உங்களுக்கு உங்கள் சுதந்தரத்தை அளித்தார். அதுதான் முதலில் நிகழ்ந்தது. இயேசு வந்து... அநேகர் அதை இவ்விதமாக சித்தரிக்கின்றனர். ''தேவன் கூறினார்: அநேகர் இழந்த நிலையில் இருக்கின்றனர். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். எனவே நான் இயேசுவை அனுப்புகிறேன், ஒருக்கால் யாராகிலும் மனஸ்தாபப்பட்டு நான் என்ன செய்தேன் என்று அறிந்து இரட்சிக்கப்படுவார்கள்” என்னும் கருத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர். ஓ, தேவன் இரக்கம் பாராட்டுவாராக! என் அலுவலகத்தை சில நேரங்களில் மிகவும் மோசமாக நான் நிர்வாகம் செய்யும் அந்த நிலையிலும் கூட, நானே அப்படி செய்யமாட்டேன் என்றால், தேவன் அப்படி செய்வாரா என்ன? 97தேவன் தமது முன்னறிவின் மூலம், யார் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக அறிந்திருந்தார். இம்முறையில் அவர் ஏற்கனவே தெரிந்து கொண்டவர்களை இரட்சிக்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இப்பொழுது படித்த வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்கு முன்னால், “அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டார்'' என்று பவுல் கூறவில்லையா. அதுதான் நமது சுதந்தரம். தேவன் நம்மை தெரிந்து கொண்டு இயேசு வந்து அதற்கான கிரயத்தை செலுத்தும்படி செய்தார். அந்த கிரயம் என்ன? அவர் சிந்தின இரத்தம். அதன் விளைவாக பாவம் எதுவும் நமது கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அதற்காக நாம் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் நீங்கள்... ''சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்த பின்பு ஒருவன் மனப்பூர்வமாய் பாவஞ் செய்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியில்லை.'' நீங்கள் எழுந்து, “சகோ. பிரன்ஹாமே, அதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்கலாம். ஆனால் இங்கு கவனியுங்கள்: “சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்த பின்பு'', அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, சத்தியத்தை அறிகிற அறிவை மாத்திரம் அடைந்திருந்தனர். பாருங்கள்? ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்து, பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். இவர்கள் தான் எல்லை கோடு விசுவாசிகள். இதை குறித்து அநேகர் எனக்கு கடிதம் எழுதியிருந்தனர். 98அந்த எல்லைக் கோட்டு விசுவாசிகள் அந்த எல்லை வரையும் சென்றார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் அதற்கு அப்பால் அங்கே சென்றனர். ஏன்? இப்பொழுது, அங்கிருந்த தேசத்தை நாம் பரிசுத்த ஆவி என்றழைப்போம். அவர்களோ இங்கே இப்பக்கம் உள்ளனர். பரிசுத்த ஆவி இங்கே உள்ளது. ஆனால் அவர்கள் அங்கே வெளியே இருந்தனர். நீங்கள் பாருங்கள்? வாக்குதத்தமானது அங்கேயிருந்தது. நல்லது, அவர்கள், ''ஒவ்வொரு கோத்திரத்திலும், ஒவ்வொருவராக பத்து வேவுகாரரை அனுப்புங்கள். ஏனெனில் நாங்கள் - எல்லா கோத்திரங்களும் - எங்கள் சுதந்திரம் என்னவென்றும், நாங்கள் எந்த ஸ்தானத்தில் வைக்கப்படுவோம் என்றும் அறிந்து கொள்வோம். ஆகவே, சில வேவுகாரரை நாங்கள் அனுப்புவோம்,'' என்றனர். இந்த வேவுகாரர்கள் எல்லையைக் கடந்து மறுபுறம் சென்றனர். “ஓ, நாமெல்லாரும் உருளும் பரிசுத்தர்கள் என்றழைக்கப்படுவோம். இல்லை. இல்லை, நம்மால் முடியாது'', பாருங்கள்? ஆனால் யோசுவாவும் காலேபும், “அது எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்'' என்று கூறி எல்லையைக் கடந்து சென்று அந்த தேசத்தை சுற்றிப் பார்த்தனர். அவர்கள் ஒரு பெரிய திராட்சை குலையை அறுத்து, தாங்கள் இருந்த இடத்திற்கு அதை கொண்டு வந்து, ''அந்த தேசம் மிகவும் நன்றாயுள்ளது. இந்த திராட்சை குலையிலிருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ருசிமிகுந்தது” என்றனர். மற்ற வேவுகாரர்களோ, ''ஆம், அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்மால் முடியாது. அந்த பெரிய ஸ்தாபனங்களை எதிர்த்து நிற்பதென்பது கூடாத காரியம். நம்மால் முடியாது. இல்லை. ஐயா! நம்மால் முடியவே முடியாது,'' என்று கூறிவிட்டு, “நாம் எகிப்துக்குத் திரும்பி செல்லலாம். அங்கேயே நாம் தங்கியிருந்தால் நலமாயிருக்கும். இவர்களை எதிர்க்க நம்மால் முடியாது. இந்த பாதை மிகவும் நேராயுள்ளது. ஓ, நம்மால் முடியவே முடியாது'' என்றனர். 99காலேபோ, ''எல்லோரும் அமைதியாயிருங்கள்'' என்றான். “யோசுவாவும், எல்லோரும் வாயை மூடுங்கள். நான் ஒன்றைக் கூறட்டும்'' என்றான். “ஓ, என்ன பரிதாபம், நம்மால் முடியாது. ஓ, நம்மால் முடியவே முடியாது. சகோ. பிரான்ஹாமே, என் சீட்டு ஆட்டத்தை நான் எப்படி விட்டுவிட முடியும்! என் தலை மயிரை கிழவியைப் போல் நான் வளர்க்க வேண்டுமானால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் குட்டைக் கால் சட்டையை அணியாமல் நான் எப்படி இருக்க முடியும்?” சுருட்டு பிடிப்பதை நான் விட்டுவிட வேண்டுமானால், '' நீ எவ்வளவு மோசமான முன்மாதிரியாய் இருக்கிறாய். ஆம். என்னால் விடவே முடியாது.'' யோசுவாவோ, “ஓ, அது நன்றாயுள்ளது. அல்லேலூயா அதை நாம் கைப்பற்றலாம்'' என்றான். அது என்ன? உயர்ந்த சுவர்கள் அரணாக அமைந்திருந்த அந்த பெரிய பட்டினங்களை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் தேவன் அளித்திருந்த வாக்குத்தத்தத்தையே பார்த்தார்கள். நீங்கள் யாராயிருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் நிலைத்து நில்லுங்கள். தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நில்லுங்கள். 100பேதுரு, நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் (எந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம்?) உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். நான் முடிக்கும் தருணத்தில், இது உங்களை தயவு செய்து புண்படுத்த வேண்டாம். யாத்திரீக பரிசுத்தர், நசரீன்களாகிய நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் வந்து, அந்த திராட்சையை காணும் அளவிற்கு அவ்வளவு அருகாமையில் வந்து திரும்பி சென்றுவிட்டீர்கள். என்ன நேர்ந்ததென்று பாருங்கள்? நீங்கள் அந்த தேசத்துக்குள் பிரவேசிக்கவேயில்லை. யாராகிலும் நசரீன் அல்லது யாத்திரீக பரிசுத்தர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மகத்தான சுகமளிக்கும் கூட்டங்களை நடத்தி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வதை எனக்குக் காண்பியுங்கள் - யாராகிலும் ஒருவரை எனக்குக் காண்பியுங்கள். நீங்கள் எகிப்திலேயே தங்கி, உங்களை வெள்ளைப் பூண்டுகளுக்கு விட்டீர்கள். நீங்கள் காதேஸ் - பர்னேயாவில் நின்றுவிட்டீர்கள். அது உண்மை. 101கவனியுங்கள், எபிரெயர் 6-ம் அதிகாரத்திலிருந்து ஒரு வசனத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். இதைக் குறித்து உங்களுக்கு என்னைக் காட்டிலும் நன்றாகத் தெரியும். இதுவரை தெரியாவிட்டால், இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். ருசி பார்த்தல். ஜனங்கள் சபைக்கு சென்று, அமர்ந்து கொண்டு, “அவர்கள் ஒருக்கால் சரியாயிருக்கலாம், ஒருக்கால் சரியாயிருக்கலாம். ஆனால் ஒன்று மாத்திரம் கூறுகின்றேன். அதற்கு விசுவாசம் அதிகம் வேண்டும்,'' என்கின்றனர். “பரம ஈவை ருசி பார்த்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகின்றனர்.'' ஒருவன், ''தேவனிடத்திலிருந்து எனக்கு ஊழியத்திற்கு அழைப்பு வந்துள்ளது'' என்று கூறும்போது, அவனுடைய தாயார் அவனை அனுப்புகிறாள். அவள், ''சரி மகனே, முதலாவதாக நான் செய்யவேண்டியது, உன்னை ஒரு வேதாகமப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,'' என்கிறாள். அதுவே அவள் செய்யக்கூடிய மிகுந்த மோசமான செயல். அது உண்மை. தேவன் அவனுக்குள் போட முயலும் எல்லாவற்றையும் அந்த வேதாகமப் பள்ளியில் அவர்கள் எடுத்துப் போட்டுவிடுவார்கள். அது உண்மை. 102இப்பொழுது கவனியுங்கள். ''சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால்!'' அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதத்தில் கண்ட பின்பும் அதை புறக்கணித்து, உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி... ஒருவன், ''ஆம், நான் தேவனை விசுவாசிக்கிறேன்.'' என்று சொல்லும்போது, அவன் முதல் அடியை எடுத்து வைக்கிறான். ''ஓ, நான் பரிசுத்தமாக்குதலில் நம்பிக்கை கொண் டிருக்கிறேன்'' என்று நீ சொல்லும்போது, நீ எல்லையினருகில் வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாயிருக்கிறாய். நீ அதை பார்த்து விட்டு, “எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களைப் போல் நான் நடந்து கொள்ள வேண்டுமென்றால்... இல்லை. எனக்குத் தெரியாது. அப்படி நடந்து கொள்ளும் ஜனங்களை அவர்கள் என்னவென்று அழைக்கின்றனர் தெரியுமா? என்னால் அப்படி நடந்து கொள்ள முடியுமோ என்னமோ எனக்குத் தெரியாது. நான் சென்று இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்கிறேன்'' பாருங்கள்? பாருங்கள்? என்ன நடக்குமென்று தெரியுமா? ''அவர்கள் பிரவேசிப்பது கூடாத காரியம். அவர்கள் தங்களுக்களிக்கப்பட்ட கிருபையின் நாளை நிந்தித்து பாவமாக்கிவிட்டார்கள்“. வேதம் அவ்வாறு கூறுகின்றது, அது கொடூரமாய் காணப்படுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் வேதம் , ''பரம ஈவை ருசி பார்த்தும் தன்னை பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணுகின்றனர்'' என்றுரைக்கிறது. 103அவர்கள், ''நாங்கள் பரிசுத்தமாக்குதலில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சுத்தமான, பரிசுத்தமான வாழ்க்கையை நாங்கள் நடத்துகின்றோம்,'' என்கின்றனர். சரி, ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்தும், ஞானஸ்நானத்தைக் குறித்தும் நீங்கள் வேதத்தில் கண்டபோது என்ன செய்தீர்கள்? உங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை நீங்கள் அசுத்தமென்று எண்ணினீர்கள். மனிதனே, உன்னை அந்த பரிசுத்த நிலைக்குக் கொண்டு வந்தது எது? நீ பாவியாயிராமல் உன்னைக் காத்தது எது? உன் வாழ்க்கையிலிருந்து பாவத்தையும், புகைப் பிடித்தலையும், மது அருந்துதலையும், பெண்களையும் எடுத்துப் போட்டது எது? எது அப்படி செய்தது? உடன்படிக்கையின் இரத்தம் மற்ற தேசத்தில் திராட்சை பழங்களை தின்னும் அளவுக்கு அவ்வளவு அருகாமையில் வந்து விட்டு, சுவிசேஷத்தைக் குறித்து நீ வெட்கப்படுகிறாய், உன் ஸ்தாபனத்துக்கு நீ பயப்படுகிறாய், தேவன் இரக்கம் பாராட்டுவாராக! ஆம், ஐயா, ''உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர், அப்படிப்பட்டவர்கள் அந்த தேசத்தில் பிரவேசிப்பது கூடாத காரியம்“. 104உங்களை நான் கேட்கிறேன். என்ன நடந்தது? நான் முன்னடையாளங்களை ஒப்பிடுபவன் (typologist). வேதாகமம் அறியும் எவனும் முன்னடையாளங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறவனாயிருப்பான். அவர்களில் ஒருவராவது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசித்தனரா? ஒருவர் கூட இல்லை. யார் அதில் பிரவேசித்தது? முதலில் அங்கு சென்று திரும்பி வந்து, “நாம் அதை கைப்பற்றலாம்”, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளலாம் ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார்'' என்று சொன்னவர்கள் மாத்திரமே, ''நான் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றால் பரிசுத்த ஆவியை நான் பெறுவேன் என்று பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு கூறினான். எனவே அந்த வாக்குத்தத்தம் எனக்குரியது. அப்படி நான் செய்ய தயாராயிருக்கிறேன்,'' என்று நாம் உரிமை பாராட்ட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? ''இந்த வாக்குத்தத்தம் எனக்குரியது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்“, அது என்னுடையது. அவர்கள் மாத்திரமே பிரவேசித்தனர். ''சகோ. பிரான்ஹாமே, உயிர்த்தெழுதலின் போது என்ன நடக்கும்?'' என்று நீங்கள் கேட்கலாம், மற்றவர்கள் அதில் இருக்கமாட்டார்கள். 'இருக்க மாட்டார்களா'? இல்லை, ஐயா. இயேசு அவ்விதம் கூறியுள்ளார். 105அவர்கள் இயேசுவிடம், ''நீ உன்னை மோசேயின் அளவுக்கு பெரியவனாக்கிக் கொள்கிறாய். நீ ஆபிரகாமைக் கண்டதாகச் சொல்கிறாய், ஆபிரகாம் மரித்துவிட்டான் , உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லையே, அப்படியிருக்க நீ ஆபிரகாமைக் கண்டதாக எப்படி சொல்கிறாய்?'' என்றனர். அவரோ, ''ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னே நான் இருக்கிறேன்“ என்றார். ஓ, என்னே! ''இருக்கிறேன்,'' எக்காலத்தும் இருக்கிறவர், நித்திய தேவன், நேற்றைக்கு அல்ல. நாளைக்கு அல்ல, எப்பொழுதும் இருக்கிறேன்.'' பாருங்கள்? எப்பொழுதும் ஜீவிக்கும் தேவன், ஏலோகிம், ''இருக்கிறேன்'' அவர்கள் அவரைக் கொண்டு போய் கொல்ல எத்தனித்தனர். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே நாற்பது வருடம் மன்னாவைப் புசித்தனர். கர்த்தர் வானத்திலிருந்து அப்பத்தை பொழிந்து அவர்களைப் போஷித்தார், அவர்கள் சபைக்குச் சென்றனர், நாற்பது ஆண்டு காலமாக அவர்கள் சபையின் நல்ல அங்கத்தினர்களாயிருந்தனர், என் தாய் அந்த சபையில் தான் மரித்தாள்'' என்றனர். “இயேசு அவர்களைப் பார்த்து அவர்கள் எல்லாரும் மரித்தார்கள்'' என்றார், ''மரணம்'' என்பது நித்திய பிரிவினை என்று பொருள்படும். ”அவர்கள் எல்லாரும் மரித்தார்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நானே தேவனிடத்திலிருந்து - வானத்திலிருந்து - இறங்கின ஜீவ அப்பம். இந்த ஆவியின் அப்பத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் அழிந்து போகமுடியாது. அவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன்“ என்றார். ஓ, சகோதரனே, அவர் அற்புதர் அல்லவா? அற்புதன் அல்லவோ, அற்புதன் அல்லவோ அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் வாசிக்கின்றோம். அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு. 106அது சரியா? சிந்தனைகளைப் பகுத்தறியும் அவருடைய ஆவி நம்மிடையே அசைவாடுவதை நாம் கண்டிருக்கிறோம். அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதை நாம் கண்டிருக்கிறோம். வேதத்தில் எழுதப்பட்டுள்ள அவருடைய வார்த்தையை நாம் கேட்டு, அது இங்கேயே உறுதிப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். ஓ, என்னே! கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் வாசிக்கின்றோம். அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு 107இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் ஞானஸ்நான ஆராதனை நடைபெறும், ஞானஸ்நானம் பெற விரும்புவோர், பெண்கள் இந்த பக்கத்திலும் ஆண்கள் அந்த பக்கத்திலும் செல்லுங்கள். எனது இடது பாகத்தில் வாருங்கள். பெண்கள் அந்த பக்கம் செல்லுங்கள். ஞானஸ்நான உடைகளுடன் சகோதரிகள், பெண்களாகிய உங்களுக்காக ஆயத்தமாக இருப்பார்கள். இங்குள்ள எந்த மனிதனும் ஸ்திரீயும்: நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதாக உறுதி கொண்டு, ஒருவன் முற்றிலும் தன் பாவத்திற்காக மனந்திரும்பும் பட்சத்தில் தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... இரத்தம் இன்னமும் கிரியை செய்யவில்லை. இது நீங்கள் தேவன் பேரில் கொண்டுள்ள விசுவாசம். தேவன் இப்பொழுது உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். (சகோ. பிரான்ஹாம் ஒலிபெருக்கியில் “ஊஷ், ஊஷ், ஊஷ்'' என்று ஊதுகிறார் - ஆசி.) அதைதான். அவர் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார். (''ஊஷ், ஊஷ்'') ''நான் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை. (”ஊஷ், ஊஷ்“). ''நான் இப்பொழுது வித்தியாசமான காரியத்தை செய்ய தொடங்கினால்'' (''ஊஷ்”) அதுதான். தொடங்கு. நீ தொடங்கினால் வித்தியாசமாக இருப்பாய். பாருங்கள்? நீ மற்ற காரியங்களை விட்டுத் திரும்பி, தொடங்க வேண்டும், பாருங்கள். நீங்கள், ''நான் அதை அவ்விதம் காணவில்லையே“ எனலாம். 108நல்லது, அருமை சகோதரனே! எந்த மனிதனாகிலும் வேறு முறையில் ஞானஸ்நானம் பெற்றதாக ஒரு வேதவாக்கியத்தை எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். என்னுடைய முப்பத்தொன்று வருட ஊழியத்தில், உலகம் முழுவதிலும் பேராயர்கள் முன்னிலையிலும் மற்றவர்கள் முன்னிலையிலும் இந்த கோரிக்கையை நான் விடுத்திருக்கிறேன் - அதாவது யாராகிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த முறையிலாவது ஞானஸ்நானம் பெற்றிருக்கின்றனர் என்று கூறும் வேதவாக்கியத்தை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுபவர் மீண்டும் அந்த நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருந்தது. தேவனுக்கு ஒரு நாமம் மாத்திரமேயுண்டு. அவருடைய நாமம் இயேசு. அது அவருடைய குமாரன். அவர் அவருடைய குமாரனின் நாமத்தை எடுத்துக் கொண்டார். இயேசு - அந்த சரீரம் ஒரு மனிதன். அதை நாமெல்லாரும் அறிவோம். அதுதான் நிழலிடப்பட்ட தேவனுடைய குமாரன். நாம் ஒருத்துவக்காரரைப் போல, தேவன் நமது விரல்களைப் போல் இருக்கிறார் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொள்வதில்லை. தேவனுக்கு மூன்று தன்மைகள் (attributes) உண்டு என்றும், அவர் அந்த மூன்று தன்மைகளில் வெளிப்பட்டார் என்றும், நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் தேவன் ஒருவரே, பாருங்கள்? அது உண்மை. ஒரே தேவன் தம்முடைய மூன்று உத்தியோகங்களில் வாழ்ந்தார் என்று நாம் விசுவாசிக்கின்றோம். ஒரு சமயம் பூமியில் அவருக்கு ஒரு உத்தியோகம் உண்டாயிருந்தது. 109இப்பொழுது பெண்கள் இப்பக்கம் செல்லுங்கள். ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற ஆண்கள் அப்பக்கம் செல்லவும். அவர்கள் ஞானஸ்நான ஆராதனைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். 110தேவனுக்கு மூன்று உத்தியோகங்கள் இருந்தன. ஒன்று பிதாத்துவம் என்றழைக்கப்பட்டது - அல்லது பிதாவின் யுகம். மற்றொன்று குமாரத்துவம் என்றழைக்கப்பட்டது. மற்றொன்று பரிசுத்த ஆவி என்றழைக்கப்பட்டது. இன்று பிதா எந்த யுகத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்?(சபையோர் “பரிசுத்த ஆவி'' என்று விடையளிக்கின்றனர் - ஆசி.) கடந்து போன நாட்களில் அவர் என்னவாயிருந்தார்? (இயேசு) இயேசு. அதற்கும் முன்பிருந்த நாட்களில்அவர் என்னவாயிருந்தார்? (”பிதா'') எனவே ஒரே ஒரு தேவன் மாத்திரமே இருக்கிறார். அதுசரியா? அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இம்மூன்றும் ஒரே தேவனின் மூன்று உத்தியோகங்களாகும். ஒரே தேவன்! பிதா என்பது நாமமல்ல. அதுசரியா? உங்களைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது மத். 28:19-ஐ உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். அதில் இயேசு, ''நீங்கள் போய் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கித்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் (நா - ம - த் - தி - னா - ல்)...'' என்றார். 111உங்களுக்கு வேதம் எவ்வளவாக தெரியும் என்று அறிய விரும்புகிறேன். இயேசு சொன்னார்: ''நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள் (அதெல்லாம் சரிதானா?) ''நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்...'' இப்பொழுது நான் மத்தேயுவிலிருந்து உங்களுக்கு எடுத்துரைக்கப் போகின்றேன். இப்பொழுது கவனியுங்கள். நான் சரித்திரக்காரர் யாரையாகிலும் கேட்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் செல்கின்றது. நிசாயா ஆலோசனை சங்கத்தில் கத்தோலிக்க சபை “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானத்தை நிறுவனம் செய்வதற்கு முன்பு, யாராகிலும், எந்த பிராடெஸ்டெண்டாகிலும் அந்த நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதாக சரித்திரப் பூர்வமாகவோ அல்லது வேத பூர்வமாகவோ எனக்கு ஆதாரம் காண்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகின்றது. இது உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று முப்பத்தேழு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றது. உங்களால் ஆதாரம் காண்பிக்க முடியுமானால், உங்கள் போக்கு வரத்து கட்டணத்தை நான் செலுத்த தயாராயிருக்கிறேன். ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது தவறான ,போலியான கத்தோலிக்க தத்துவம். அது கிறிஸ்துவ ஞானஸ்நானம் அல்ல. உண்மை! லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து வெளி வரும்போது கத்தோலிக்க போதனைகளையும் அவருடன் கூடகொண்டு வந்தார். வெஸ்லியும் அதை கடை பிடித்தார். ஆனால் தேவனுடைய புத்திரர் வெளிப்படும் இந்த நாளில், உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் இப்பொழுது வெளிப்பட வேண்டும். இதுவே அந்த நேரம். நிச்சயமாக. 112வேதத்தில் யாருமே ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்“ நாமத்தில் ஞானஸ்நானம் பெறவில்லை என்று நினைவிருக்கட்டும். கடைசி அப்போஸ்தலன் மரித்து முன்னூறு ஆண்டுகள் வரைக்கும் யாருக்குமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை. நான், ”நிசாயாவுக்கு முன்பிருந்த பிதாக்கள்“ (Pre-Nicene Fathers). ''நிசாயா ஆலோசனை சங்கம்” (Nicene council) என்னும் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நிசாயா ஆலோசனை சங்கத்திலிருந்து தான் அவர்கள் தங்களை ஸ்தாபிக்கத் தொடங்கி, ''கிறிஸ்தவ உலக சபை“ (Christian Universal Church) என்னும் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி எல்லோரும் அதில் சேரும்படி நிர்ப்பந்தம் செய்தனர். அதுதான் கத்தோலிக்க சபை. ''கத்தோலிக்கம்” என்னும் சொல் ''உலகம் பூராவும்'' என்று பொருள்படும். “உலகம் பூராவும் இந்த கிறிஸ்தவ உலக சபை” என்னும் ஒரே சபையை அவர்கள் நிறுவி, கிறிஸ்தவ மார்க்கத்தை அதற்குள் கொண்டு வரவேண்டுமென்று அரும்பாடுபட்டனர். அதில் சேரும்படி அவர்கள் ஜனங்களை கட்டாயப்படுத்தினர். அந்த சபையில் அவர்கள் 'வீனஸ்' (Venus) தேவதையை எடுத்துப்போட்டு, அதற்கு பதிலாக மரியாளை நுழைத்தனர். ஜூபிடரை (Jupiter) அவர்கள் எடுத்துப்போட்டு அதன் ஸ்தானத்தில் அவர்கள் பவுலை வைத்தனர். ஆனால் அது இன்னமும் அஞ்ஞானமாகவே (pagan) உள்ளது. கத்தோலிக்க சபை அஞ்ஞான மார்க்கத்திலிருந்து தோன்றின ஒன்றாகும், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பு... 113லூயிஸ்வில்லில் 'பென்ஹர்' (Ben Hur) என்னும் படக்காட்சி இப்பொழுது காண்பிக்கப்படுகின்றது. அண்மையில் அவர்கள் 'பத்து கட்டளைகள்' (The Ten Commandments) என்னும் படக்காட்சியை காண்பித்தனர். 1500 ஆண்டுகளின் இருளின் காலங்கள் என்பதை அவர்கள் படம் பிடித்து காண்பித்தால் நலமாயிருக்கும் - 1500 ஆண்டு காலமாக அஞ்ஞானிகளால் நேர்ந்த இன்னல்கள். எல்லோரையும் அவர்கள் கட்டாயப்படுத்தி, அதில் சேராதவர்களைக் கொன்று போட்டு ஜனங்களைத் தூண்டிவிட்டனர். அவர்கள் ஒரு காளையை ஒரு புறத்திலும், மற்றொரு காளையை மற்றொரு புறத்திலும் கட்டி விட்டு, ஜனங்கள் சிலுவையிலுள்ள உருவத்தை (Crucifix) முத்தமிடமறுத்தால், காளைகளை வெவ்வேறு திசையில் ஓட்டிவிட்டு அவர்களைக் கிழித்தெறிந்தனர். சுவிட்சர்லாந்தில் அவர்கள் நிலைக்கால்களில் (Posts) நிறுத்தப்பட்டு, மந்திரவாதிகள் என்றழைக்கப்பட்டு, அவர்கள் நாவுகள் துண்டிக்கப்பட்டன. அந்த இடத்தை நான் கண்டு, தொட்டுப் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் உண்மை! உண்மை! 114அதே ஆவி இன்று நிலவி வருகின்றது. அது கிரியை செய்யாதபடிக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் தடுத்து வருகின்றன. அதற்கு சுயாதீனம் கிடைக்கும் வரை காத்திருங்கள். வேதம் அவ்வாறு கூறியுள்ளது, அதற்கு தருணம் கிடைக்கும் போது, அதன் உண்மையான தன்மையை காண்பித்துவிடும். எனக்குத் தெரிந்த வரை, நீங்கள் ஒருக்கால் விரைவில் அதற்குவோட்டு போட்டு, அதை தேர்ந்தெடுக்க வகையுண்டு. பாருங்கள்? அது வரும், அது - வரும், அதை நிறுத்த வழியேயில்லை. அது வந்து தான் ஆகவேண்டும். அது உண்மை. அது வந்துதான் ஆக வேண்டும். அது வந்து கொண்டிருக்கிறது. அது வரும் போது பாருங்கள். சகோதரரே, இந்த ஒன்றை நீங்கள் அறிய விரும்புகின்றீர்களா? நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். ஆமென். அணிவகுத்து முன்னேறிச் செல்கிறேன். அவ்வளவு தான். 115ஒரு சமயம் லாம்சா வேதாகமத்தை எழுதினவரிடம் நான் கூறினவிதமாக; அவர் தேவனுடைய பழைமையான அடையாளத்தை எனக்குக் காண்பித்த போது, அதில் மூன்று சிறு புள்ளிகள் இருந்தன. அவை என்ன? என்று நான் அவரைக் கேட்டேன். அவர், ''அவை தேவன் மூன்று தன்மைகளில் இருப்பதைக் குறிக்கின்றன'' என்றார். ''நான், பிதா, குமாரன், பரிசுத்தஆவி, என்னும் தன்மைகளிலா?'' என்று கேட்டேன். அவர்,“நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா?” என்றார். நான், “ஆம், ஐயா'' என்றேன். அவர், ''அன்றிரவு உங்கள் கூட்டத்திலே சிந்தனைகளைப் பகுத்தறிதலைக் கண்டேன். நீங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருக்க வேண்டுமென்று எண்ணினேன் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!'' என்று கூறிவிட்டு, தமது கையை என் தோள்களின் மேல் போட்டு, ''இந்த அமெரிக்க ஜனங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. கிழக்கத்திய புத்தகம் ஒன்றை அவர்கள் எடுத்துக்கொண்டு, அதிலிருந்து மேற்கத்திய புத்தகம் ஒன்றை உண்டாக்கப் பார்க்கின்றனர். அவர்களுடைய வேதத்தை அவர்கள் அறியாமலிருக்கின்றனர்“ என்றார். அவர் தொடர்ந்து, ”வானத்தின் கீழெங்கும் இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. எல்லோரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்றனர். ஒரே தேவனில் மூன்று ஆட்கள் என்பது கிடையவே கிடையாது என்றார். அவர் தான் சகோதரன் லாம்சா - லாம்சா வேதாகமத்தை எழுதியவர். அவர் ஜனாதிபதி ஐசன்ஹவருக்கும், மற்றும் உலகிலுள்ள அநேக அரசியல் நிபுணர்களுக்கும் ஆப்த நண்பர். அவர் தமது கையை என் தோளின் மேல் போட்டு, ''ஒரு நாளில் அவர்கள் இதற்காக உம்மை சுட்டுக் கொல்ல நேரிடும். ஆனால் அப்படிப்பட்டவர் அனைவருமே ஒரு நோக்கத்திற்காகவே மரிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்றார். 116பேதுருவை சிறைச்சாலையில் அடைத்திருந்தபோது அவன் எப்படியிருந்தானோ, அது போலவே நானும் இருக்க ஆவல் கொள்கிறேன். அங்கு ஒரு வயோதிபன் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தான், பேதுரு அவனைப் பார்த்து, ''என்ன நேர்ந்தது?'' என்று கேட்டான். அவன் பேதுருவை நோக்கி, ''இன்றைக்கு உன்னைக் கொல்லப் போகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். பேதுரு “ஆம்'' என்றான். அவன், ''இன்றைக்கு நீ மரிக்கப் போகிறாய்'' என்றான். பேதுரு, “ஆம்'' என்றான். அப்பொழுது அவன், ''உனக்கு பயமில்லையா?' என்று கேட்டான். பேதுரு, ''இல்லை'' என்றான். அவன், “அப்படியானால் நீ கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவனாக இருக்கவேண்டும்'' என்றான். பேதுரு, “ஆம்” என்றான். அவன், ''பயப்படாமல் இருக்க உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டான். அப்பொழுது பேதுரு உட்கார்ந்து அவனிடம் முழு வரலாற்றையும் கூற ஆரம்பித்தான். அவன், ''வேண்டுமானால் நான் இன்று விடுதலையடைந்தவனாய் இருந்திருக்கக் கூடும். நான் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு என் வாழ்க்கையை நடத்தியிருந்தால், நான் சிறைபட்டிருக்க வேண்டிய அவசியமேயில்லை. நான் பட்டினத்து வாசலை விட்டு வெளியே சென்றபோது, ஒருவர் உள்ளே நடந்து வருவதைக் கண்டேன். அவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவரிடம் நான், ''ஆண்டவரே, எங்கே போகிறீர்?“ என்று கேட்டேன். அவர், ''நான் மறுபடியும் சிலுவையில் அறையப்படப் போகிறேன் என்று பதிலளித்தார்'' நான் உடனே திரும்பி வந்து விட்டேன் என்றார். அப்பொழுது காவல்காரர், ''சீமோன் பேதுரு யார்?“ என்றனர். அவன், “இதோ இருக்கிறேன்'' என்று சொல்லி சிலுவையில் அறையப்பட அவர்களுடன் சென்றான்.